செய்திகள்

இந்தியா ஒரு அசிங்கமான நாடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் பாய்ச்சல்

நியூயார்க், அக். 23-

இந்தியா ஒரு அசிங்கமான நாடு என, அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் வேட்பளாராக, அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் நேற்று நாஷ்வில் பகுதியில் நடந்த இறுதிகட்ட விவாத நிகழ்வில் பங்கேற்றனர்.

அப்போது இருவரும் பல்வேறு விவரங்கள் தொடர்பாக காரசாரமாக விவாதித்தனர். அமெரிக்காவில் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பலமாகாணங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என டிரம்ப் கூறினார்.

பொருளாதாரம், மருத்துவ சேவைகள், உலக சுற்றுச்சூழல் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது டிரம்ப் இந்தியா குறித்து பேசிய விஷயங்கள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்து பேசிய அவர் இந்தியா ஒரு அசிங்கமான நாடு என்று கூறியுள்ளார். அமெரிக்காவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பேசிய அவர், சீனா, ரஷ்ய, இந்தியா போன்ற நாடுகளை பாருங்கள். அந்த நாடுகள் எல்லாம் அசிங்கமானவை. காற்றின் தரம் மிகவும் குறைவாக இருக்கிறது. பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து நம்மை நீக்கிவிட்டனர். இது நல்லதல்ல. நாம் மிகவும் சுத்தமான காற்றையும், நீரையும், குறைவான கார்பன் உமிழ் அளவையும் கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *