விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும் : டைரக்டர் ஹென்றி ஐ செல்லம் கொடுத்து குழந்தையை வளர்க்கும் இளம் பெற்றோர்களுக்கு விழி திறந்திருக்கிறார் ஹென்றி ஐ. அழிச்சாட்டியும் பண்ணும் (விவரம் தெரியா வயசு) குழந்தைகளுக்கும் வழிகாட்டி இருக்கிறார். அசாத்திய துணிச்சல் இயக்குனருக்கு. ரசிகர்களுக்கு அவ்வளவாக பரிச்சயப்படாத “ஆடுகளம்” முருகதாஸ் , லெவினா, குழந்தை நட்சத்திரம் பிரதிக்ஷா… மூவரை மட்டுமே பிரதானமாக வைத்துக் கொண்டு படத்தை முடித்து அதிலும் வெற்றிகரமாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் என்றால் அவர் விஷயத்தில் அது சரித்திர சாதனை தான். […]