மாஸ்கோ, டிசம்பர் 19: ரஷ்யா, புற்றுநோய்க்கான mRNA அடிப்படையிலான புதிய தடுப்பூசியை உருவாக்கி விட்டதாகவும் அதனை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த முக்கிய முன்னேற்றம், ரஷ்ய பிரஜைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதாக ஊடக செய்திகள் உறுதிபடுத்துகின்றன. இந்த தகவலை ரஷ்ய சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொதுநிர்வாக இயக்குநர் அந்த்ரே கப்ரின் அறிவித்தார். பல ஆராய்ச்சி மையங்கள் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசி, முன்-நடைமுறைகள் மூலம் கட்டிகளை கட்டுப்படுத்தி, பரவலைத் தடுக்கக்கூடிய திறனை நிரூபித்துள்ளது. […]