சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

சென்னை, பிப். 17–

ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் பிரம்மாண்ட ஆக்க்ஷன் படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது.

ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம். இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையில், ஆக்க்ஷன் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் திரை வாழ்வில், திரையில் தோன்றிராத மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு கன்னட நடிகை ருக்மணி வஸந்த் ஜோடி.

இசையமைப்பாளர் அனிருத். சுதீப் எலமான் – ஒளிப்பதிவு. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங். அருண் வெஞ்சரமுது கலை இயக்கம். சண்டைக்காட்சி மாஸ்டர் திலீப் சுப்புராயன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *