திருவனந்தபுரம், மார்ச் 21– கேரள மாநில பார் கவுன்சிலில், பத்ம லட்சுமி என்ற திருநங்கை, முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டுள்ளார். கேரள மாநில பார் கவுன்சிலில் அண்மையில் பதிவு செய்து கொண்ட 1500 பேரில், மாற்றுத்திறனாளி பெண்ணும் வழக்கறிஞருமான பத்ம லட்சுமி என்ற திருநங்கையும் ஒருவர். அவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்ம லட்சுமிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வாழ்த்து கூறியுள்ள கேரள சட்ட துறை அமைச்சர் பி […]