செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? – பகுதி–15: இணையம்–3.0 பிளாக்செயினில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள்!


மா. செழியன்


கடந்த 14 பகுதிகளில் புதிதாக உருவாகி வரும் இணையம்–3.0 என்ற பிளாக்செயின் தொழில்நுட்பத்திலான “நம்பிக்கை இணையம்” ஏற்படுத்தி வரும், புரட்சிகரமான மாற்றம் பற்றி ஓரளவு புரிந்துகொண்டுள்ளோம் என்று நம்புகிறேன். நிறைவாகவும், அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடனும் இந்த தொடரை நாம் நிறைவு செய்யும் முன்னர், இதனை தொகுத்து புரிந்து கொள்ள முயல்வோம்…

தற்போதுள்ள இணையம் 2.0 பயன்பாடு கடந்த 20 ஆண்டுகளில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இதனை, கூகுள், பேஸ்புக் போன்ற உலகின் பெரு நிறுவனங்கள் நடைமுறையில் உள்ள இணையத்தை கட்டுப்படுத்துகின்றன. ஆனால், வெப் 3.0 எனும் ‘நம்பிக்கை இணையம்’–3.0 நம்முடைய தரவுகள் மற்றும் பயன்பாடுகளை, மையப்படுத்தப்படாத பரவலாக்கும் சங்கிலித் தொடர் பதிவேடு தொழில்நுட்பத்திற்கு மாற்றுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் யார் ஒருவருக்கும் கட்டுப்பாடு இல்லை. அதாவது தரவு மற்றும் பயன்பாடுகள் எந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்காது.

இந்த தொழில்நுட்பம் நமது தரவு பாதுகாப்பை மேம்படுத்துகிறது, யார் ஒருவரும் நமது தரவுகளை மேற்பார்வை செய்வதை எதிர்த்துப் போராடுவதுடன் பயனர்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. மேலும் புதிய தொழில்நுட்பம் முதலீட்டு வாய்ப்புகளையும் கூட வழக்குவதை பார்த்தோம். இந்நிலையில், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக வளர்ந்து வரும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கும் வகையில் புதிய புதிய தொழில்நுட்ப உத்திகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

பிளாக்செயினில் புதிய மாற்றங்கள்

குறிப்பாக, இதுவரையில் பயன்படுத்தப்பட்டு வந்த ‘JavaScript’ போன்ற பாரம்பரிய இணைய மொழிகளை விட பாதுகாப்பாகவும் விரைவாகவும் உருவாக்கும் வகையில் தற்போது WebAssembly (WASM) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் ஈத்திரியம் (Ethereum) போன்ற பிளாக்செயின்களில் பயன்பாடுத்தப்பட்டு செயல்திறனை மேம்படுத்தி உள்ளனர். இது ஜாவா ஸ்கிரிப்டைவிட 20 மடங்கு அதிக திறன் மற்றும் வேகமாக செயல்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், ‘Layer-2 ஸ்கேலிங்’ என்ற முறையில் ஒரு பிளாக்செயினில் இருந்து Sidechains என்ற முறையில் மற்றொன்று பிரித்து, பரிவர்த்தனைகளை செய்ய உதவுகிறது என்று கூறுகிறார்கள். அதுதவிர மெய்நிகர் தொழில்நுட்பத்தில், Metaverse ஐ ஒருங்கிணைத்து 3D முறையில் மக்கள் ஒன்றாக இணைந்து பணிபுரியவும், விளையாடவும், சமூகமயமாக்கவும் முடியும் வகையிலான மாற்றங்களும் நடைபெற்று வருகிறது. இவை எல்லாம், இணையம் –3.0 இல் தற்போதுள்ள குறைகளை போக்கி, குறைந்த கட்டணத்தில், அதிக செயல்வேகத்தில் செயல்பட பிளாக்செயின் தொழில்நுட்பதிலான மேம்பாட்டு பணிகள் என்று கூறுகிறார்கள்.

தொழில்நுட்பம் என்பது வளர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று. ஒன்றிலிருந்து மற்றொன்று, மற்றொன்றில் இருந்து வேறொன்று என்று தொடர் சங்கிலியாக மாறிக்கொண்டேதான் இருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை அறிந்த மனிதன் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறான். நாமும் அதனை புரிந்து கொண்டு மாறும்போது வளர்ச்சி சாத்தியமாகும்தானே. வருவதை புரிந்துகொண்டு, மாற்றங்களோடு வளர்வோம். வாழ்த்துகள் நன்றி.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *