வாழ்வியல்

கறவை மாடுகளின் சினைப் பருவமின்மை அதன் தீர்வுகள்!

தமிழ்நாட்டின் முதுகெலும்பு விவாசயமும், கால்நடை வளர்ப்பும் தான். அதிலும் பால் மாடு வளர்ப்பு பல லட்சம் கிராமங்களுக்கு வாழ்வாதாரமாகும். கால்நடைகள் மூலம் பெறப்படும் பால், தயிர், பாலாடைகட்டி, நெய், வெண்ணெய் போன்றவை, மக்களுக்கு உணவாகவும் உணவுக்கு மூலப் பொருளாகவும் பயன்படுகிறது. சினைப் பருவமின்மை என்பது, சினைப்படும் அறிகுறியை வெளிப்படுத்தாமை அல்லது சினைப் பருவ அறிகுறிகளை கண்டுபிடிக்க இயலாமை ஆகும். இந்நிலை பொதுவாகக் கிடாரிகளிலும், எருமைகளிலும், கன்றை ஈன்ற மாடுகளிலும் காணப்படும் முக்கியச் சிக்கலாகக் காணப்படுகிறது. * உடற்செயலியல் […]

வாழ்வியல்

சூரியனின் ஆயுட்காலம் முடிந்து ஒளிரும் புகைப்படலமாக மாறும்!

மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூரியன் தனது ஆயுள் காலம் முடிந்து நெபுலா என்னும் ஒளிரும் புகைப்படலமாக மாறும் என்று கணித்துள்ளனர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சூரியனின் ஆயுள் காலம் எப்போது முடிகிறது என்றும், அதற்குப் பின் என்ன ஆகும் என்றும் ஆராய்ச்சி மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். சூரியன், விண்மீன்களில் சராசரி அளவும் ஆயுளும் கொண்டதாகும். இப்போது சூரியனுக்கு 5 பில்லியன் ஆண்டுகள் வயதாகி விட்டது. இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தன் […]

வாழ்வியல்

நம் பற்களை வெள்ளையாக வைத்துக்கொள்ள வழிகள்–1

பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமெனில் டூத் பேஸ்ட் மட்டும் தான் உதவும் என்று நினைத்தால் தவறு. ஏனெனில் டூத் பேஸ்ட் கூட பற்களை வெள்ளையாக மாற்றாது. ஆனால் ஒருசில இயற்கைப் பொருட்களை நம் முன்னோர்கள் பற்களை துலக்கப் பயன்படுத்தியதைக் கொண்டு, பற்களை துலக்கினால், பற்கள் வெள்ளையாக பளிச்சென்று இருப்பதோடு, பற்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். நீங்கள் பற்களை வெள்ளையாக மாற்ற எத்தனையோ வழிகளை முயற்சித்திருப்பீர்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை தவறாமல் முயற்சித்தால், உடனடி பலனைப் பெறலாம். ஆலிவ் […]

வாழ்வியல்

செவ்வாய் கிரகத்திலிருந்து ஒலியை கேட்ட ‘இன்சைட்’!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் மே 5-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணித்து உள்ளது. இந்த விண்கலம் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் […]

வாழ்வியல்

பேரிச்சம் பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள்!

ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம். தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும். இனிப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டிய சர்க்கரை நோயாளிகள் கூட […]

வாழ்வியல்

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர், புதுசவால்கள்

2018 முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் இறுதி வாரங்களில் பல சவால்களை இந்திய பொருளாதாரம் சந்தித்து வருவது மேலும் குழப்பத்தை விளைவிப்பதாகவே இருந்தாலும் அது எந்த பெரிய பாதகத்தையும் ஏற்படுத்தாது என நம்புறோம்! ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனராக தமிழகத்தின் முன்னாள் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சக்தி காந்ததாஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். திடீர் என உர்ஜித் படேல் சுயகாரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவித்த மறுநாளே புதிய ஆளுனர் பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 37 ஆண்டுகால அரசுப்பணி சேவையில் இறுதி கட்டத்தில் […]

வாழ்வியல்

வார நாட்கள் – வசந்த நாட்கள்

ஞாயிறன்று உதயமாகும் புதிய ஞாயிறே – இந்த ஞாலமெல்லாம் உவகையாக எழுக திங்களே * பேயினைப் போல் மதவெறியை ஓட்டச் செ(ய்)வ்வாயே – நல்ல பெருமையுடன் படைக்க வேண்டும் காவியப் புதனே * தாய்மை எங்கும் துலங்கிடவே வா வியாழனே – நெஞ்சில் துணிவு பணிவு தேசப்பற்று தா நல் வெள்ளியே * வாய்மை வளரத் தீமைகளைத் தவிர்த்து நண்மை செய்யும் சனி– இனி வாரநாட்கள் விளங்கும் நல்ல வசந்த நாட்களே * எல்லோரும் ஒன்றாகவே – […]

வாழ்வியல்

கடல் கொந்தளிப்பு, சுனாமி ஏற்படுவதன் காரணம் என்ன?

கரையைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குத் திரும்பினால் அதற்கு அலை என்று பெயர். அதற்கு மாறாக, நிலத்தை நோக்கி சீறிப் பாய்ந்து நிலப்பரப்பிற்கு வந்தால், அது அலை அல்ல ‘ஆழிப்பேரலை’ அல்லது ‘சுனாமி’ (Tsunami). சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தை. இதற்கு ‘துறைமுக அலை’ என்று பொருள். ஜப்பானியத் துறைமுகங்களை, இந்தப் பேரலைகள் தாக்கியதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. ஒரே ஓர் அலையால் ஏற்படுவது அல்ல சுனாமி. அடுக்கடுக்கான பல அலைகள் உருவாகி, கரையை நோக்கி மணிக்கு 1,000 […]

வாழ்வியல்

உடலுக்கு புத்துணர்வு தரும் பல்வேறு உணவு வகைகள்–3

சுக்கு காபி சுக்கு, மல்லி, ஏலக்காய் மற்றும் பனங்கருப்பட்டி கலந்து, காபிபோல் செய்து, பால் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ குடித்துவர, பசி மந்தம், தலைவலி, மூட்டுவலி நீங்கும். மேலும், சுறுசுறுப்புடன் இருக்கவும் இது உதவும். நெல்லிக்காய்ச் சாறு 2 அல்லது 3 பெரிய நெல்லிக்காய்களைக் கொட்டை நீக்கி, ஒரு டம்ளர் நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்க, பார்வைத்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கும். […]

வாழ்வியல்

3வது முறை பயன்படும் ராக்கெட்டின் உந்தும் பகுதி!

அமெரிக்காவின் தனியார் விண்வெளி அமைப்பான ‘ஸ்பேஸ் எக்ஸ்,’ தனது பால்கன் 9 ராக்கெட்டின் உந்தும் பகுதியை, மூன்றாவது முறையாகப் பயன்படுத்தியது. கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதே ராக்கெட்டை உந்தும் அடிப் பகுதியை பயன்படுத்தியது. கடந்த, 3ம் தேதி அமெரிக்காவின் வாண்டன்பர்க் விமானப் படைத்தளத்திலிருந்து கிளம்பும்போது, பால்கன் 9ன் உந்தும் பகுதி பார்க்கப் பரிதாபமாக, கரி பூசப்பட்டிருந்தது. ஆனால், 64 சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் சுழலவிட்டு, வெற்றிகரமாக பசிபிக் கடலில், ஒரு மிதவை மேடை மீது […]