சிறுகதை

பெண் சாமிகள்..! – ராஜா செல்லமுத்து

“அம்மா, இவ எப்பவுமே என்னாேட செல்போன எடுத்து நோண்டிக்கிட்டே இருக்கா. “என்று தங்கை ரமா மீது புகார் கூறினாள் அக்கா ஹேமா

“இல்லப்பா இவ தான் என்னோட லேப்டாப்ப எடுத்து ஏதாவது பண்ணிட்டே இருக்க ” என்று ஹேமாவும் ரமா மீது புகார் சொன்னாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் இதே வேலயா போச்சில்ல. எப்பப்பாரு ஒருத்தர ஒருத்தர் புகார் பண்ணிட்டு நீங்க ரெண்டு பேரும் கூடப் பிறந்த அக்கா, தங்கைகளா இல்ல, வழிப் போக்கர்களா? உங்க ரெண்டு பேரு தொல்ல தாங்க முடியல” என்று இரண்டு பேரையும் திட்டினார் அப்பா ஜெயசீலன்.

“ஏங்க, இவங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருந்தா தினமும் சண்டை வந்திட்டே இருக்கும். ஒருத்தி எவளையாவது ஆஸ்டல்ல கொண்டு போயி சேத்து விடுங்க . இல்ல என் உயிர் போயிரும் போல ” என்று ஜெயசீலனிடன் கத்தித் தீர்த்தாள் மனைவி ராஜேஸ்வரி.

“அதுதான் சரி, ஒங்க ரெண்டு பேர்ல யாரு ஆஸ்டலுக்கு போறிங்க. மூட்ட முடிச்சக் கட்டுங்க” என்று ஜெயசீலன் சொல்ல,

அப்பா நான் போக மாட்டேன் . இவளப் போகச் சொல்லுங்க” என்று ஹேமா சொல்ல,

“அப்பா நான் போகமாட்டேன். அவளப் பாேகச் சொல்லுங்க” என்று ரமா சொல்ல,

ஐயோ, இப்பவே ஆரம்பிச்சிட்டிங்களா? ஒன்னு சொன்னா யாரும் கேக்குறதில்ல. ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் குடுக்கிற மனப்பான்மை இல்ல. நீங்க எல்லாம் எப்படித்தான் கூடப் பிறந்தீங்களாே? என்று வருந்தினாள் ராஜேஸ்வரி.

“ரெண்டு பேரும் வீட்டுல இருந்திட்டு, நான் தான் சமைக்கிறேன். நான் தான் பாத்திரம் தேய்க்கிறேன். வீடு பெருக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் ஒரு வேளை செய்றதில்ல. பொம்பள பிள்ளைங்க, கூட மாட உதவி செய்வீங்கன்னா, உபத்திரம் பண்ணிட்டு இருக்கிங்க ” என்று மறுபடியும் பேசினாள் ராஜேஸ்வரி.

“ஏன் ராஜேஸ்வரி, ரெண்டு பொண்ணுங்க இருக்கிற எல்லா வீட்டுலயும் இப்பிடித் தான் சண்ட வந்திட்டே இருக்குமா?” ஜெயசீலன் கேட்க

என்னமோங்க தெரியல. நம்ம வீட்டுல தான். இப்படி ? என்று வருத்தப்பட்டு சொன்னாள் ராஜேஸ்வரி.

சில நாட்களாக சண்டையும் சத்தமாக இருந்தார்கள். ஒரு நாள் மூத்தவள் ஹேமாவிற்கு ஒரு வரன் வந்தது. அவளைத் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று குடும்பத்தார்கள் நினைத்தார்கள். அக்கா திருமணம் முடித்தால் நாம் வீட்டில் சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் ரமா.சில நாட்களில் பரிசம் போட்டார்கள். எப்படியும் நீ வீட்டை விட்டுப் போய் விடுவாய். நான் சுதந்திரமாக இருப்பேன் என்று சந்தோஷப்பட்டாள் ரமா. திருமணம் வரை அமைதியாக இருந்த ரமாவிற்கு திருமண நாளன்று ஹேமாவை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. இன்னும் சிறிது நாளில் தன்னை விட்டு ஹேமா போகப் போகிறாள். சிறு வயதிலிருந்து இன்று வரை நம்முடன் சண்டை போட்ட ஒரு உயிர் ,ஒரு ஜீவன் நம்மை விட்டு இன்னொரு வீட்டுக்கு போகப்போகிறது என்று அவளால் தாங்க முடியவில்லை . அழுதாள் எத்தனையாே பேர்கள் அவளைச் சமாதானப் படுத்தினார்கள். அவளால் அழுகை நிறுத்த முடியவில்லை .அழுது கொண்டே இருந்தாள்

“ஏண்டி, நீங்கதான் எப்பவும் சண்டை போட்டு இருப்பீங்களே? இப்ப அவ உன்னைய விட்டு போறா. இனி வீட்ல நீ மட்டும் தான் இருக்கப் போற சந்தோசம் தானே?’ என்று ராஜேஸ்வரி கேட்க

“அம்மா அது என்னமோ தெரியல. கூட இருக்கும்போது சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன். ஆனா இப்ப என்ன பிரிஞ்சு போறான்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கும்மா. என்னால தாங்க முடியல” என்று தேம்பித் தேம்பி அமுதாள் ரமா

அதே திருமண மேடையில் ரமாவும் ஹேமாவும் கட்டிப்பிடித்து அழுது கொண்டார்கள். திருமணம் முடித்து , சில நாட்களில் ஹேமா கணவன் வீட்டுக்கு சென்று விட்டாள். அன்றிலிருந்து ரமா எதையோ தாெலைத்தது பாேல் இருக்கிறாள்.

இப்போது அவள் யாருடனும் சண்டை போடுவதில்லை. பிரச்சனை செய்வதில்லை. அப்பா அம்மாவுக்கு கீழ்ப்படிந்து நல்ல பிள்ளையாக இருக்கிறாள்.அவளின் சுட்டித் தனங்கள் சுருண்டு கொண்டன. ஹேமாவிடம் , ரமா தினமும் செல்போனில் பேசத் தவறுவதில்லை . அப்படிப் பேசும் போதெல்லாம் அழாமல் இருப்பதில்லை ரமா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *