சிறுகதை

பெண்ணின் கோபம் | ராஜா செல்லமுத்து

அர்ச்சனாவுடன் எத்தனையோ ஆண்டுகளாய் காதல் கொண்டு வந்த சந்திரனை அன்று நிராகரித்தாள் அவள் என்னாச்சு? ஒன்னுல்ல இல்ல இன்னைக்கு உன்னோட முகமே சரி இல்லை ஒன்னுல்லன்னா விட்டுறேன்…என்று அவள் சொல்லும் போதே கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. “என்ன அர்ச்சனா, நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?” அழாத குறையாகக் கேட்டான் சந்திரன். “இச்” என்று ஒற்றை வார்த்தை சொன்னாலும் அவன் அடி மனது எவ்வளவோ அக்கினியை அடைகாப்பதாய் உணர்ந்தாள். அவள் விழிகளில் உஷ்ணம் உறைந்து போய், கோபம் […]

சிறுகதை

பின்புலம் | ராஜா செல்லமுத்து

அன்றைய தினம் தமிழரசனுக்குப் பாராட்டு விழா .அவரின் தொழில், அவரின் அலுவல், அவரின் சேவை என அத்தனைக்கும் சேர்த்து, மொத்தமாக ஒரே நாளில் அவருக்கு நன்றி சொல்லவும் அவரின் இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம் என்பதைச் சொல்லவும் அன்று கூடியிருந்தவர்கள் பேசத்தயாராக இருந்தார்கள். “தமிழரசன் எளிமையான உடையில் இருந்தார். அவரின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்புகளின் ஒட்டுமொத்த ஒளியையும் சேர்த்து வைத்திருந்தது. வந்திருந்தவர்கள் எல்லாம் தமிழரசனின் வளர்ச்சியைப் பார்த்து பிரமித்து நின்றார்கள் . தமிழரசன் எளிமையே உருவாய் […]

சிறுகதை

ரணங்கள்

சிறுகதை ராஜா செல்லமுத்து   முகநூல் நட்பு என்பது கெடுதல் என்பதைவிட, அது சுகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் என்பது சுந்தருக்கு ரொம்ப தெளிவாகவே தெரிந்தது. எத்தனையோ முகநூல் நட்புகள் முன்னுக்கு வந்தாலும் அவர்களை எல்லாம் உடனே ஏற்றுக் கொள்ளமாட்டான் . அவர்களின் புரபைல் தகுதியினை பார்த்த பிறகே அவர்களை ஏற்றுக் கொள்வான். அவனின் நண்பர்கள் பட்டியலில் எத்தனையோ நண்பர்கள் இருக்கிறார்கள். சுந்தர் போடும் கவிதைகள் செய்திகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் பதிவிடுவார்கள்.அத்தனைக்கும் அசராமல் பதில் எழுதுவான்சுந்தர். […]

சிறுகதை

பறக்கவா மறக்கவா! | * டிக்ரோஸ் *

வானம் மேலே போனால் என்ன? அட பூமி கீழே வந்தால் என்ன? என பாடல் அலறிக் கொண்டு இருந்தது. அன்று அந்தச் சாராய பார் தடபுடலாகத் தான் இருந்தது! விடுமுறை வந்து விட்டால் விமான நிலையத்தில் கூட்டம் அலை மோதும். அந்த சிறு விமான நிலையத்தில் இருந்த உணவகங்கள், மது சாராய பார்களில் மகிழ்ச்சி நேரமும், Happy Hours உண்டு, ஒன்று வாங்கினால் மூன்று இலவசம்! அப்படி என்ன மகிழ்ச்சி என கேட்கலாம். ‘லக்குதிப்பு’ நாட்டில் அப்படித் […]

சிறுகதை

தடை தடையல்ல | ராஜா செல்லமுத்து

கருப்பு அன்றும் சோர்வாகவே இருந்தான். ஆனால் அவன் முயற்சி மட்டும் முறியாமலே இருந்தது. நண்பன் ராமன் அவனை எப்பொழுதும் தோற்றுக் கொண்டே இருப்பான். “கருப்பு முயற்சி செஞ்சுட்டு இருக்கீங்களா? “ஆமா” “ஆமா, கருப்பு முயற்சி தான் நமக்கு மூச்சு மாதிரி. அத எப்பவும் விட்டுரவே கூடாது. “சரி ராமன்” இப்ப எங்க போயிட்டு இருக்கீங்க? “சாப்பிட” “ஓ கையில என்ன டிபன்? சாப்பிட்டு மதியத்துக்கு வாங்கிட்டு வர என்ற கருப்புவின் கையைப் பார்த்தான், ராமன், அவன் கையில் […]

சிறுகதை

உணவு கட்டுப்பாடு அவசியம் | துரை. சக்திவேல்

ஆத்திச்சூடி நீதி கதைகள் – 20 நுண்மை நுகரேல் (விளக்கம்: நோய் தரக்கூடிய பொருட்களை உண்ணாதே ) * * * அதிகாலை நேரம் இருள் கொஞ்கம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருந்தன. தென்றல் காற்று இதமாக அடித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் மக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடமாட தொடங்கினர். தலையில் குல்லா அணிந்து கொண்டு, சிறுவர்கள் போல் டவுசர், டி–சர்ட் போட்டுக் கொண்டு, காதில் செல்போன் ஹெட்மோனை மாட்டிக் கொண்டு ரவி வீட்டை விட்டு வெளியே வந்தார். அவர் […]

சிறுகதை

பாசம் | ராஜா செல்லமுத்து

அனுசூயா பார்த்துப்போ… போடாதே…. போடாதே… என்று செல்லமாக அரற்­றிக் கொண்டே இருந்தாள், அம்மா, விஜயலட்சுமி. “ம்ம்…. நான் விழமாட்டனே, என்று தன் செல்லக்குரலில் பேசிய அனுசுயா தன் அண்ணன் லோகேஷீடன் பூங்காவில் ஓடிக்கொண்டிருந்தாள். அண்ணா புடி பாப்போம் என்று ஓடிய அனு­சூயா ஜல் ஜல் ஜல் என தன் கொலுசுக் கால்கள் பரபரக்க ஓடிக்கொண்டிருந்தாள். அந்தப் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் ஆட்களுக்கு மத்தியில் இந்த இரண்டு பிஞ்சுகளும் பஞ்சு பாதங்களில் ஓடிக்கொண்டிருந்தது. “கெக்கே…. … கெக்கே” …. என்ற […]

சிறுகதை

மோட்சம் | ராஜா செல்லமுத்து

சரவணனின் தொண்டை கொஞ்சம் பெரியது போல. அவர் சாதாரணமாக பேசும் பேச்சு கூட அதிவேகத்தில் கேட்கும். சார், கொஞ்சம் கம்மியா பேச முடியுமா? ஏன்? நீங்க பேசுறத இந்த பஸ்ஸே வேடிக்கை பார்க்குறாங்க அப்படியா? “ஆமா” என்று விஜயின் சொன்னபோது அப்போது தான் சரவணன் திரும்பிப் பார்த்தார். ஒன்றிரண்டு பேர் அவரைப் பார்த்தபடியே இருந்தனர். சில பேரின் முகத்தில் சிரிப்பு முகாமிட்டிருந்தது. “ஆகா நம்மள எல்லாரும் வேடிக்கை பாக்குறானுங்களோ ? என்ற சரவணனின் கொஞ்சமாகப் பேசினாலும் சத்தம் […]

சிறுகதை

விவரமான விவசாயிகள்! | * டிக்ரோஸ் *

இரண்டு வாரத்தில் திருமணம். ரேகா மனதில் இனம்புரியாத பயம். பரிதவிப்பு. அவ்வப்போது கண்ணாடியைப் பார்த்த வண்ணம் வீட்டிற்குள் அங்கும் இங்கும் நடைபோட்டுக் கொண்டிருந்தாள். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லையே என்ற கவலை அன்று வந்தது. ஒரு அக்காவோ தங்கையோ இருந்தால் தனது சந்தேகங்களுக்கு விடை கொடுத்து இருப்பார்களே! அன்று 1303–வது முறையாக கண்ணாடி பார்த்த போதும் ‘அட ரேகாவே கறுப்பாயிருக்கியே!’ என சிணுங்கினாள். பெற்றோர்கள் தமிழரசனும் பச்சைக்கிளியும் நகரத்துக்குச் சென்று திருமண பொருட்கள் வாங்கச் சென்றிருந்ததால் இப்படி […]

சிறுகதை

இனம் இனத்தோடு…. | ராஜா செல்லமுத்து

ஒருவனின் திறம் எதுவோ?அதுவே உடன் வரும்…. பாரதியைச் சுற்றி ஒரு கூட்டமே கூடி நின்றது. அவரின் ஆற்றலையும் ஆளுமையையும் எல்லோரும் புகழ்ந்து பேசினர். பாரதி இன்னைக்கு இவ்வளவு பெரிய இடத்தில இருக்காரே அதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க? என்ற சிவாவின் பேச்சுக்கு மனோஜ் உடனே பதில் சொன்னான், அது அவரோட உழைப்புங்க. அயராத உழைப்புங்க. மனுசன் ராத்திரி பகல்ன்னு பார்க்காம உழைப்பாருங்க. அது தான் இன்னைக்கு அவரோட உயர்ந்த நிலைக்கு காரணம் என்று சொன்ன மனோஜ் அவரின் […]