10 நிமிடம் ….! – ராஜா செல்லமுத்து
நெடுந்தூரப் பயணத்தில் விரைந்து கொண்டிருந்தது, குளிரூட்டப்பட்ட ஒரு அரசுப் பேருந்து. இருக்கை முழுவதும் அமர்ந்திருந்தனர், பயணிகள். வேகம், மிதவேகம் என்று தார்ச்சாரையில் ஓடிக்கொண்டிருந்தது, அந்தப் பேருந்து. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக உள்ளுக்குள் குளிரால் நிறைந்திருந்தது. இரவும், பகலும் இரண்டும் சேர்த்த நேரம் என்பதால், அந்தப் பயணம் பயணிகளுக்கு இதமாக இருந்தது. ஆங்காங்கே சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் தங்கள் காதுகளில் இயர்போனை வைத்து பாடல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தார்கள். […]