செய்திகள்

பாஜக கூட்டணி 150 இடங்களில்கூட தேறாது: ராகுல் காந்தி உறுதி

போபால், மே 7–

பாரதீய ஜனதா கட்சி கூட்டணி 150 இடங்களில் கூட தேறாது என்று ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பிரச்சாரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசுகையில், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

150 கூட தேறாது

பாஜக தலைவர்கள் கூறுவதுபோல், தேசிய ஜனநாயக கூட்டணி 400 அல்ல 150 இடங்களை கூட ஜெயிக்க முடியாது. காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணி கட்சிகளும் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாத்து வருகிறது. காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், மக்களின் வாழ்க்கை நிலையை அறிவதற்காக, நாட்டின் அரசியல் திசைகளை மாற்றுவதற்காக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பொருளாதாரரீதியாக பழங்குடிகள் மற்றும் பட்டினத்தவர்கள் இதர பிற்படுத்தபட்டோர் கணக்கு எடுப்பும் நடத்தப்படும்.

இந்தியாவில் உள்ள 22 பணக்காரர்களுக்காக மட்டுமே மோடி கவலைப்படுகிறார். ஆனால் இந்தியா கூட்டணி பழங்குடிகள் பட்டியல் இனத்தவர்கள், ஓபிசி, ஏழை பொது பிரிவினர் முன்னேற்றத்திற்காக இந்தியா கூட்டணி மட்டுமே சிந்திக்கிறது என்று ராகுல்காந்தி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *