செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி 14- பிளாக்செயினில் நம் பெயர்களை தனியுரிமையாக்கிக் கொள்ளுதல்!


மா. செழியன்


அதேபோல, பெல்நெட் (BelNet) என்ற ஒன்றையும் பெல்டெக்ஸ் பிளாக்செயின் உருவாக்கி வருகிறது. பயனர்களுக்கு தங்கள் இணைய பயன்பாட்டை பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைத்திருக்க பெல்நெட் உதவுகிறது. இதன் காரணமாக, ஆன்லைன் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. பாரம்பரிய விபிஎன்களை விட வேகமானது என்பதுடன் செயல்திறன் வாய்ந்தது. மேலும் அரசுகள் போன்ற மூன்றாம் தரப்பினர் கூட, இணைய தரவு, இணைய செயல்பாடுகளை கண்காணிக்கவோ அல்லது தடுக்கவோ முடியாது என கூறப்படுகிறது. இதுவும் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே உள்ளது.

அதேபோல், பெல்டெக்ஸ் பிரவுசர் (Beldex Browser) என்பது தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு புதிய டெஸ்க்டாப் வலை உலாவி ஆகும். பெல்டெக்ஸ் பிரவுசர் ஒருங்கிணைந்த BelNet VPN ஐ கொண்டுள்ளது, இது உங்கள் இணைய போக்குவரத்தை குறியாக்கி, உங்கள் IP முகவரியை மறைக்கிறது. இதன் விளைவாக, உங்கள் ஆன்லைன் செயல்பாடுகளை ISP கள், அரசாங்கங்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பினர் கண்காணிக்க முடியாது. இதனால் உங்கள் ஆன்லைன் செயல்பாட்டின் எந்த தடயத்தையும் விட்டுச் செல்லாமல் வலை உலாவலாம். இதனால், உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருட பயன்படுத்தப்படும் (Fishing) சாதனங்களில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

‘பெல்டெக்ஸ் வாலட்’ (Beldex Decentralized Wallet) என்பது மற்றொரு நம்பிக்கை இணையத்தின் செயலி. கிரிப்டோ கரன்சி என்பது பணத்துக்கு மாற்றான டிஜிட்டல் கரன்சி என்று முன்பே பார்த்தோம் அல்லவா? அந்த டிஜிட்டல் பணத்தை யாரும் திருடிவிடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமல்லவா? அதற்காக உருவாக்கப்பட்டது ‘பெல்டெக்ஸ் வாலட்’. இந்த வாலட்டில், பெல்டெக்ஸ் கிரிப்டோ கரன்சிகளை வைத்துக்கொள்ளவும், மற்றொருவருக்கு அனுப்பவும், வேறு யாரும் பெல்டெக்ஸ் கிரிப்டோ காயின்களை நமக்கு தந்தால், வாங்கி வைத்துக்கொள்ளவும் முடியும். மேலும் இந்த வாலட்டில் இருந்தே ‘ஸ்டேக்கிங்’ (ஸ்டேக்கிங் குறித்தும் முன்பே பார்த்துள்ளோம்தானே?) கொடுக்கவும் முடியும். இதில் பிளாக்செயின் தொழில்நுட்பத்திலான இந்த வாலட்களில், ஒன்று செல்போன்களுக்கான ஆன்ட்ராய்டு வாலட், மற்றொன்று கணினிகளில் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் டெஸ்க் டாப் வாலட்.

பெல்டெக்ஸ் பெயர் சேவை

அதுதவிர, பெல்டெக்ஸ் பெயர் சேவை ‘BNS’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது. தற்போதைய இணையத்தில் டொமைன் பெயர் அமைப்பு (DNS-DOMAIN NAME SYSTEM) என்பதை கேள்விப்பட்டிருப்போம். டிஎன்எஸ் என்பது இணையத்தில் உள்ள சாதனங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கு ஐபி பெயர்களை வழங்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு. கூகுள், அமேசான், மக்கள் குரல், டிரினிட்டி மிரர் என்று இணையத்தில் நாம் படிக்கக்கூடிய டொமைன் பெயர்களை, இயந்திரங்கள் படிக்கக்கூடிய ஐபி முகவரிகளுக்கு, பெயர்கள் மற்றும் எண்கள் ஒதுக்கீடு செய்யும் இணைய நிறுவனம் (ICANN-Internet Corporation for Assigned Names and Numbers). அதுபோல் மையப்படுத்தப்படாத பிளாக்செயினில் BNS, பெயர் சேவையை (Beldex Name Service) வழங்குகிறது.

இதன் மூலம் BChat ஐடி, வாலட் முகவரிகள் மற்றும் BelNet முகவரிகளில் இணைத்துக்காெள்வதன் மூலம் மனிதர்கள் படிக்கக்கூடிய பெயர்களை பிஎன்எஸ் வழங்குகிறது. இது பிளாக்செயின் தொழில்நுட்பத்திலானது என்பதால், தற்போது நடைமுறையில் உள்ள ICANN அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு உட்படாதது. பிஎன்எஸ் டொமைன் பெறுவதன் மூலம் பெல்டெக்ஸ் பிளாக்செயினில் இயங்கும் பிசாட்,பெல்டெக்ஸ் வாலட் மற்றும் பெல்நெட் ஆகியவற்றின் HASH KEY முகவரிகளை பகிர்ந்துகொள்ளாமல், பெயரை பகிர்ந்து கொள்வதன் மூலம் (எடுத்துக்காட்டாக பிஎன்எஸ் டொமைனில் CHEZHIAN.BDX என்ற பிளாக்செயின் டொமைனை வாங்கிக்கொள்வதன் மூலம்) உலகத்தில் எந்த மூலையில் இருப்பவரும், இந்த பெயரை வைத்தே தொடர்பு கொள்ளவும் கிரிப்டோ கரன்சிகளை அனுப்பவும் பெறவும் முடியும் என்று கூறப்படுகிறது. இவை எல்லாமே தனியுரிமை எனும் பிரைவசி பிளாக்செயின் தொழில்நுட்பத்திலானது என்பது குறிப்பிடத்தக்கது. (தொடரும்…)


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *