புதுடெல்லி, மே.12- கோடை வெப்பத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது தொடர்பாக, பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. பள்ளிகள் எடுக்க வேண்டிய கோடைகால முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:- பள்ளிகளை முன்கூட்டியே தொடங்கி மதியத்துக்குள் முடிக்கலாம். பள்ளி திறப்பின் நேரம் காலை 7 மணி முதல் இருக்கலாம். மாணவர்களை சூரிய ஒளியில் நேரடியாக விளையாடவோ, நடமாடவோ அனுமதிக்க வேண்டாம். காலை நேரத்தில் விளையாட அனுமதிக்கலாம். பள்ளி வாகனங்களில் […]