நாடே பார்த்து அதிர்ந்த டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளின் கைவரிசை இருக்கிறது என்று பாரதீய ஜனதா கட்சியினர் கூறி வந்தாலும் சமூக வலைதளங்களின் உதவி பெரிதாக இருந்தது என்பதை நாடே அறியும். பலமுறை பல்வேறு சந்தர்ப்பங்களில் யாருடைய தலைமை அழைப்பு ஏதுமின்றி ‘ திடீர் ‘ என ஒரு பெரும் கும்பல் கூட பெரும் கலவரமாக மாறி, பலவித விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் அரங்கேறி விடும் அபாயத்தை பார்த்துள்ளோம். அந்த பட்டியலில் முன்னணியில் இருப்பது ‘அரபு வசந்தம்’ […]