போஸ்டர் செய்தி

மக்களை கவர்ந்த மோடி: ரஜினிகாந்த் பேட்டி

சென்னை, மே 28

மக்களை கவர்ந்த தலைவர் மோடி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாராளுமன்ற தேர்தல் வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. தலைவனை முன்னிறுத்தி தான் வெற்றி கிடைக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.

இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா? என்று கேட்டதற்கு, டெல்லியில் மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன் என்று அவர் கூறினார்.

தமிழகம், ஆந்திரா, கேரளாவை தவிர மற்ற மாநிலங்களில் மோடி ஆதரவு அலை உள்ளது. தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை உள்ளது. எதிர்ப்பு அலை வந்தால், யாரும் வெற்றி பெற முடியாது.

மோடிக்கு எதிரான அலை காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட், ஸ்டெர்லைட் குறித்து எதிர்க்கட்சிகளின் சூறாவளி பிரச்சாரம் காரணமாக பாரதீய ஜனதாவுக்கு தமிழகத்தில் தோல்வி கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மத்தியில் பதவி ஏற்க உள்ள அரசு, தமிழகத்திற்கு சிறப்பான திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் தோல்வி ஏற்பட்ட போதிலும் காவிரி கோதாவரி இணைப்பை செயல்படுத்துவது தான் முதல் பணி என்று கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு எனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஜினி கூறினார்.

கட்சி துவங்கி 14 மாதங்களில் கணிசமான ஓட்டுகள் பெற்ற கமல் கட்சிக்கு எனது பாராட்டு.

தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது. அவருக்கு தலைமை பண்பு இல்லை என்பதை ஒப்பு கொள்ளமாட்டேன். காங்கிரசில் பல மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. அவர்களை கையாள்வது ராகுலுக்கு சிரமம்.

ஜனநாயக நாட்டில், ஆளுங்கட்சி போல், எதிர்க்கட்சிகளும் முக்கியம் என்பதால் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்று ரஜினி கூறினார்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் வலுவான பிரச்சாரம் தான் அண்ணா தி.மு.க. தோல்விக்கு காரணம் என்று ரஜினிகாந்த் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *