சிறுகதை

நெகட்டிவ் – ராஜா செல்லமுத்து

எதற்கு எடுத்தாலும் எதுவும் முடியாது; அது நடக்காது; இதை செய்ய முடியாது; இது வேலைக்கு ஆகாது ; இது சரிப்பட்டு வராது என்று தமிழில் இயலாமைக்கு எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ அத்தனை வார்த்தைகளையும் ஒருசேர பேசிக் கொண்டிருப்பான் செல்வராஜ் .

அவனின் எண்ணம் முழுவதும் கரையான் புத்து சிந்தனைகள் ஆகவே முளைத்து கிடக்கும் . ஒரு நாள் ஒரு பொழுது இது நடக்கும் . இது முடியும். இதை நம்மால் நடத்திக்காட்ட முடியும் . செய்ய முடியும் என்று ஒருபோதும் அவன் சொன்னது கிடையாது

அவனுடைய சிந்தனைகள் எல்லாம் எதிர்மறை சிந்தனைகள் ஆகவே எழுந்து நின்றன. அவனை பின்தொடர்ந்த ஆதி ஒரு நாள் கேட்டு விட்டான்.

ஏன் எப்பவும் நீங்க நெகட்டிவ் சிந்தனை வச்சு இருக்கீங்க ? எதையும் பாசிட்டிவாக திங் பண்ணுங்க என்று கேட்டான்.

ஏன் என்ன பார்த்தா நெகட்டிவா திங் பண்ற மாதிரி தெரியுதா? பாசிட்டிவா தான் இருக்கேன் என்று வெறும் வார்த்தைக்கு மட்டுமே சொன்னான் செல்வராஜ்.

இல்ல இந்த செயல் , சிந்தனை எண்ணம் எல்லாம் பாஸிட்டிவா இருக்கணும். நெகடிவாக இருக்கக்கூடாது.

உதாரணமாக ஒரு தொழிலுக்கு போறோம் அந்த வேலையை செஞ்சா நம்மால் உயர முடியும் .என்று நான் சொன்னா நீங்க இல்லை இது முடியாது . அதில ஆயிரம் சிக்கல் இருக்குன்னு சொல்லுவீங்க . அந்த தொழிலை பத்தின சிந்தனை நமக்குள் வரும் போதே அதை முளையிலேயே கிள்ளி எறிந்து

இருக்கீங்க . அடுத்த இடத்துக்கு நான் போக முடியாமல் நிறைய தவிச்சிருக்கேன்.

நான் கேட்டா, அது இல்லையே அப்படி எல்லாம் இல்ல. நான் அப்படி சொன்னது இல்லையேன்னு சொல்லுவீங்க. நீங்க அப்படி தான் சொல்லுவீங்க. நான் எதாவது ஒரு முயற்சி செஞ்சா அதற்கு முட்டுக்கட்டை அடிப்பீங்க என்று ரொம்பவே அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் ஆதி.

நீ சொல்ற மாதிரிலாம் இல்ல எனக்கும் பாசிட்டிவ் திங்கிங் இருக்கு என்று ஒப்புக்காக சொன்னான் செல்வராஜ்.

அண்ணே நான் ஒரு கதை சொல்லட்டுமா?

வெளிநாட்டு கதையா இருக்கு . அதனால உங்களுக்கு சொல்றேன்.

அது என்ன கதை சொல்லு பாப்போம் என்று முகம் மலர்ந்தான் செல்வராஜ்

ஒன்னு இல்ல ஒரு வெளிநாட்டில் ஒரு பெரிய தவறை பண்ண ஒருத்தனுக்கு, அந்த நாட்டு நீதிமன்றம் அவனுக்கு ஒரு தீர்ப்பு சொல்லுச்சு.

என்ன தீர்ப்பு என்று ஆவலாக கேட்டாள் செல்வராஜ்.

அதாவது தப்பு பண்ண அந்த நபரை பாம்பு கடித்து சாகடிக்கணும். இதுதான் தண்டனை . அப்படி சொல்லிட்டாங்க. அந்த தண்டனை கொடுக்கறதுக்கு இன்னும் ஒருவாரம் இருந்தது . அந்த நபர் தன்னைப் பாம்பு கடித்து தான் கொலை பண்ணுவாங்கன்னு நினைச்சு அவன் ஒரு வாரம் முழுசும் அத ராத்திரி பகலில் தூங்கும்போதும் உட்காந்திருக்கும்போதும் அவனுடைய மனசும் முழுவதும் நினைவு முழுதும் எண்ணம் முழுதும் முழுவதும் பாம்பு கடிக்கிறது மாதிரி மாதிரியே அவன் நினைச்சிட்டு இருந்தான்.

ஒரு வாரம் முடிஞ்சது . அப்போ அந்த குற்றவாளியை போலீஸ்காரங்க கூட்டிட்டு போய் ஒரு சேரில் உட்கார வச்சு, அவன் கை கால் எல்லாம் கட்டிட்டு கண்ண கட்டிட்டாங்க. இப்போ அந்த குற்றவாளி மனசுல நம்மள ஒரு பாம்பு தான் கடித்துக் கொல்லப் போகுது . அதுதான் நீதிபதி கொடுத்த தீர்ப்புன்னு அவன் நினைச்சுக்கிட்டே இருக்கான்.

அப்போ அவனுக்குள்ள தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒரு காவலாளி, ஒரு சின்ன குச்சியை எடுத்து அவனுடைய தொடையில குத்தினார். அந்த குச்சி குத்து அவனுடைய மனசுல பாம்புதான் நம்மள கடிச்சதுன்னு நினைத்து செத்துட்டான்.

அவனுடைய உடம்பை பரிசோதனை பண்ணி பார்க்கும் போது அவன் இறந்தது உறுதி செய்யப்பட்டது.ஒரு மனுஷன் எதை பற்றி சிந்திக்கிறானோ அதுவா தான் ஆகுறான்.

அந்த குற்றவாளி மனசு முழுவதும் நமக்கு கொடுக்கப்பட்ட தண்டனை பாம்பு கடிக்கவிட்டுக் கொல்வது அப்படினு நினைச்சுகிட்டு இருந்திருக்கிறது.

அதனாலதான் ஆட்டோமேட்டிக்கா அவனுடைய மைண்ட்ல பாம்புகடித்து சாகப்போகிறோம் என்ற பயம் இறங்கி மரணம் நிகழ்ந்து இருக்கிறது.

இதுதான் நம்ம சிந்தனைக்கும் செயலுக்கும் மூளைக்கும் உள்ள ஒற்றுமை . அதுக்கு தான் இப்படி ஒரு கதை சொன்னேன் என்றான் ஆதி.

இதுதான் உண்மை . உங்களுடைய சிந்தனை எந்த அளவுக்கு இருக்கோ?அந்த அளவுதான் மூளையிலிருந்து சுரப்பி சுரக்கும். நேர்மறையான எண்ணங்கள் இருந்தால். அது நேர்மறையா இருக்கும். எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால் அந்த சுரப்புதான் சுரக்கும்.

அதனால எதைப்பற்றி நீங்க யோசனை பண்ணாலும் அத நேர்மறையா நினையுங்கள். எதிர்மறையா நினைக்காதீங்க.

என்று ஆதி சொன்னபோது ….

அந்தக் கதையை கேட்டு வாய்பிளந்து நின்றான் செல்வராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *