செய்திகள்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 20 செயற்கை சுவாச கருவிகள்: அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்

திருப்பத்தூர், ஜூலை 22–

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 20 செயற்கை சுவாச கருவிகளை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்திட போர்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். மேலும் நோய் கண்டறியும் பணிகள் மற்றும் சிகிச்சை அளிக்க தேவையான நவீன உபகரணங்களை தேவைக்கேற்ப உடனுக்குடன் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கி மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றார்.

அதனடிப்படையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 20 செயற்கை சுவாச கருவிகள் மொத்தம் ரூ.2.0 கோடி மதிப்பீட்டிலும், கொரோனா ரைவஸ் தொற்று பரிசோதனை மையத்தில் பயன்படுத்திட மரமணுவை தானியங்கி முறையில் பிரித்தெடுக்கும் கருவி ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் அரசு வழங்கியுள்ளது. இந்த கருவிகளை அமைச்சர் கே.சி. வீரமணி மருத்துவ அதிகாரிகளிடம் வழங்கினார்.

இந்த உயிர்காக்கும் இயந்திரங்களை விரைவாக வழங்கி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் நன்றி தொிவித்துக்கொண்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ம.ப.சிவன்அருள், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் யாஸ்மின், மருத்துவமனை அரசு தலைமை மருத்துவர் திலீப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.ரமேஷ், முன்னாள் சர்க்கரை ஆலைத்தலைவர் செல்வம், மருத்துவர்கள் பிரபாகரன், செந்தில்குமார், சிவக்குமார், மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *