செய்திகள்

சோனி ஆராய்ச்சி மைய நிறுவனம் இந்தியாவில் துவக்கம்

சென்னை, ஜூலை 9–

பிரபல ஜப்பான் நாட்டு சோனி நிறுவனம் செல்போன், டி.வி, கேளிக்கை சாதனங்கள் தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது.

சோனி உலக மக்களின் உணர்வுகளை ரசிக்க வைக்க படைப்பு திறன் மற்றும் நவீன தொழில் நுட்ப திறனுடன் ஆராய்ச்சி செய்கிறது. ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை அடுத்து இந்தியாவில் ஆராய்ச்சி பிரிவை நிறுவி உள்ளது.

கற்பனை திறன், படைப்பு ஆற்றல், உள்ள ஆராய்ச்சியாளர் இதில் பணிபுரிகின்றனர்.

இதற்கான சோனி ரிசர்ச் இந்தியா நிறுவனத்தை துவக்கி உள்ளது. இந்த நிறுவனத்துக்கு ஆராய்ச்சி மையங்கள் மும்பை, பெங்களூரு நகரங்களில் அமைந்துள்ளது. சோனி விளையாட்டு சாதனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்களை நவீனப்படுத்த, மேம்பட்ட தொழில் நுட்பத்தை உருவாக்க இதன் ஆராய்ச்சி பிரிவு செயல்படும்.

மருத்துவ சாதனங்கள், பயோ டெக்னாலஜி, நுண்ணுயிர் அறிவியல் கண்டுபிடிப்புகளை சோனி ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி செய்யும். இது பற்றி அறிய www.sony.net வலைதளம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *