சிறுகதை

கால் வெயிட்டிங் – ராஜா செல்லமுத்து

ராகவன் கம்பெனி விஷயமாக நிறுவன முதல்வருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

கம்பெனியின் நடவடிக்கைகள் வேலைப்பளு, சம்பளம், இத்தியாதி இத்தியாதி என்று நிறுவன முதலாளி ராகவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கு ராகவன் உச் கொட்டுவதும் தேவை என்றால் பேசுவதுமாக இருந்தார்.

அவரின் நீண்ட நேர பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்தது.

அப்போது ராகவனுக்கு சுந்தரம் போன் செய்தான்.

ராகவன் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலோடு ராகவனின் போனில் கால் வெயிட்டிங் என்று வந்தது.

யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் சுந்தரம் தன்னுடைய போனை கட் செய்யவில்லை. நீண்ட நேரம் அடித்துக் கொண்டே இருந்தது . இது ராகவனுக்கு எரிச்சலைத் தந்தது.

முதலாளியின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் ராகவனுக்கு சுந்தரத்தின் கால் வெயிட்டிங் கோபத்தை ஏற்படுத்தியது

கால் வெயிட்டிங் பீப் சவுண்ட் முதலாளி பேசுவதை இருட்டடிப்பு செய்தது .

ஏன் இப்படி இருக்காங்க? அதான் பேசிட்டு இருக்கேன்னு தெரியுது இல்ல . முழு ரிங் இருக்கிற வரைக்கும் கால் வெயிட்டிங் வரணுமா? இது என்ன பழக்கம் என்று ராகவன் பொங்கிக் கொண்டே முதலாளியின் பேச்சை செவி மடுத்தார்.

நீண்டநேரம் ரிங் ஆனது, பெருமூச்சு விட்ட ராகவன் மறுபடியும் முதலாளி உடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

பொறுக்க முடியாத சுந்தரம் மறுபடியும் ராகவனுக்கு போன் செய்தான் ராகவன். போனில் மறுபடியும் கால் வெயிட்டிங் வந்தது.

ஒரு ரிங் 2 ரிங்கோட கட் பண்ணாம முழுசா அடிக்கும் வரைக்கும் வெயிட்டிங்ல் வைத்தான் சுந்தரம்.

முதலாளியுடன் முக்கியமாக பேசிக்கொண்டிருக்கும் அந்த போன் காலில் ஏன் இந்த சுந்தரம் இவ்வளவு நேரம் கால் வெயிட்டிங் வருகிறார் ? ஒரு மேனரிசம் இல்லையா? அடுத்தவர்களுடன் பேசிக்கொண்டு கட் செய்தால் வெயிட்டிங் வரும் காலில் நிச்சயமாக பேசுவோம் என்பது சுந்தரத்திற்கு தெரியாதா? ஏன் இப்படி இருக்கிறார்கள்? என்று ராகவன் நொந்து கொண்டார்.

சிறிது நேரம் சுந்தரத்தின் கால் வெயிட்டிங் பீப் சவுண்ட் ராகவனை கொஞ்சம் கோபம் அடைய செய்தது.

முதலாளியுடன் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டு நொடிகள் கழித்து மறுபடியும் சுந்தரம் ராகவனுக்கு போன் செய்தான்.

மறுபடியும் கால் வந்தது . கட் பண்ணாமல் முழு ரிங் வரைக்கும் சுந்தரம் கால் வெயிட்டிங் போட்டான்.

இது ராகவனுக்கு கடுமையான எரிச்சலைத் தந்தது. முதலாளியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் ராகவனின் கால் வெயிட்டிங் கடுமையான கோபத்தை வரவழைத்தது.

மறுபடியும் மறுபடியும் என்று சுந்தரம் ராகவனுக்கு போன் செய்து கொண்டிருந்தான்.

ஒரு கால் வெயிட்டிங் என்று வந்து கொண்டே இருந்தது. கடுமையான கோபத்தில் இருந்து கொண்டு முதலாளியின் பேச்சை தட்டிக்கழிக்க முடியாமல் முதலாளியுடன் பேசிவிட்டு உடனே சுந்தரத்திற்கு போன் செய்தான்.

ரொம்பக் கூலாக சுந்தரம் யார் கிட்டயோ பேசிகிட்டு இருந்தீங்க போல? என்று ஏளனமாக கேட்டான்.

ஹலோ அதான் பேசிட்டு இருக்கேன்னு தெரியுது இல்ல. ஒரு ரிங் 2 ரிங் அடிச்சுட்டு கால் வெயிட்டிங் வந்தா கட் பண்ண வேண்டியதுதானே? அது என்ன முழுதும் அடிக்கிற வரைக்கும் பண்றது . எதிர்திசையில் பேசிகிட்டு இருக்கிறவங்க, எதுக்காக பேசுறாங்க என்ன காரணத்துக்கு பேசுறாங்க? என்ன நோக்கத்திற்கு பேசுறாங்கன்னு தெரியுமா ? அது தான் பேசி முடிச்சதும் கால் வெயிட்டிங் வந்ததுன்னு பேசுவேன்ல. அப்புறம் மறுபடி மறுபடியும் ஏன் போன் பண்ணே சுந்தரம் என்று ராகவன் கேட்டான்.

அசட்டு சிரிப்பு சிரித்தான் சுந்தரம்.

சரி நீ எதுக்காக எனக்கு அத்தனை போன் பண்ணே சொல்லு ?என்று ராகவன் கேட்டான்.

சும்மா தான் பேசினேன் போர் அடிச்சது. உன் கூட ஏதாவது கடலை போடலாம். அப்படின்னுதான் உனக்கு கால் பண்ணேன் என்று சுந்தரம் சொன்னபோது

அது ராகவனுக்கு கடுமையான எரிச்சல் வந்தது

முட்டாள் நான் ஒரு முதலாளி கூட பேசிகிட்டு இருக்கேன். நிறைய விவரங்களை நாங்க பேசிகிட்டு இருந்தோம் . நிறுவனம் பற்றிய வளர்ச்சி, நிறுவனத்தின் உடைய சம்பளம், நிறுவனத்துடைய வேலையாட்கள் , இதை பேசுறத விட்டுட்டு , பத்து தடவை போன் பண்ற?

என்று கடுமையாக திட்டினார் ராகவன்.

ஒன்றுமில்லாத உன் கூட பேசறதுக்கு முக்கியமான போன கட் பண்ணிட்டு நான் வரணுமா? ஒன்னு தெரிஞ்சுக்க. யாருக்கு நீ பேசுவதாக இருந்தாலும் பேசுறவங்க கால் வெயிட்டிங் வந்துச்சுன்னா, ஒரு ரிங்க கட் பண்ணிரு அது தான் உனக்கு மரியாதை. பேசுறவங்க முக்கியமான போன் பண்ணிட்டு இருக்கும்போது, முழு கால் அடிக்கும்போது, என்ன நடக்கும்னு தெரியுமா? அவ்வளவு கோபம் வரும்னு உங்களுக்கு புரிய மாட்டேங்குது என்று ராகவன் சுந்தரத்தை திட்டினார்.

சுந்தரம் ரொம்பவே இலகுவாக அதற்கு பதில் சொன்னார்.

அவன் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ராகவனுக்கு கடுமையான கோபம் வந்தது.

அதிலிருந்து தன்னுடைய செல்போனில் கால் வெயிட்டிங் என்ற ஒரு காலத்தை எடுத்துவிட்டார்.

இப்போது யார் பேசினாலும் பிஸி என்ற ரிங்டோன் மட்டுமே கேட்டது.

மற்றவரிடம் பேசும்போது இது தொந்தரவாக அமையாது . யாராக இருந்தாலும் ஒரு போன் பேசினதுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என்பது தானே முறை.

இப்போது ராகவனின் போனில் கால் வெயிட்டிங் என்ற ஒரு காலம் இல்லாமல் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *