செய்திகள்

ஓட்டல் ஊழியர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Spread the love

சென்னை, ஜூன் 19–

குடும்பப்பிரச்சினை காரணமாக ஓட்டல் ஊழியர் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, கோடம்பாக்கம் அழகிரிபுரத்தைச் சேர்ந்தவர் ரகுவரன். தனியார் உணவகம் ஒன்றில் சப்ளையராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று வழக்கம்போல மனைவியிடம் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, ரகுவரன் வீட்டை விட்டு வெளியேறினார். கோடம்பாக்கம் பாரதீஸ்வர் நகரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார். அங்கு 2வது மாடியில் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென ரகுவரன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *