செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: ரூ.42 லட்சம், புடவைகள் பறிமுதல்

சென்னை, அக். 1-

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.42 லட்சம் ரொக்கப் பணம், மின்விசிறிகள், புடவைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலிலும் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தாசில்தார் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பறக்கும் படையினர் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

215 புடவைகள்

இந்நிலையில் கடந்த மாதம் 18 ந் தேதி முதல் 28 ந் தேதி வரை பறக்கும் படையினரால் நடத்தப்பட்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டரூ. 41 லட்சத்து 90 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 100 மின்விசிறிகள், 215 புடவைகள், ஆயிரத்து 65 துண்டுகள், 250 பித்தளை விளக்குகள், 600 குங்குமச் சிமிழ்கள், ஆயிரத்துக்கும் அதிகமான மதுபாட்டில்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மேற்கண்ட தகவல் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *