நாடும் நடப்பும்

உணவு பாதுகாப்பு, எரிசக்தி, நிதி தட்டுப்பாடு ஜி20 நாடுகள் அணி தலைமையில் இந்தியா

சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்பு


ஆர். முத்துக்குமார்


உலகின் 20 முன்னணி பொருளாதாரங்கள் கொண்ட கூட்டணி ஜி20 நாடுகள் அணி அமைப்பாகும். உலக விவகாரங்களில் மிக முக்கியத் திருப்புமுனைத் திட்டங்களையும் ஏற்பாடுகளையும் இந்த அமைப்பு கலந்தாலோசித்து எடுத்தால் அதுவே எதிர்கால சந்ததியர்களுக்கு மிக உபயோகமானதாக ஒன்றாக இருக்கும்.

தற்போது இந்த அமைப்பு இந்தோனேசியா தலைமையில் செயல்பட்டது. அவர்களது குறிக்கோள் டிஜிட்டல் மயம் குறிப்பாக தகவல் சேமிப்பு என்பதாகும். மேலும் கொரோனா தொற்று ஏற்படுத்திய பொருளாதார சரிவை ஈடுகட்ட பல்வேறு நடகடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இந்த தகவல் சேமிப்பு அதாவது டிஜிட்டல் உலகில் எந்த முறையை பின்பற்றுவது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு வங்கி வேறு நாட்டில் கட்டுமானம் ஏற்படுத்தி செயல்பட பல்வேறு உரிமங்கள் பெற்று, அந்நாட்டு சட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றும். கூடவே பல்வேறு பரிவர்த்தனை தகவல்கள் அவர்கள் நாட்டில் உள்ள கணினிகளிலும் வைத்துக்கொண்டு இருக்கும்.

ஏதேனும் காரணமாக அந்த தகவலில் உள்ள அம்சங்கள் இரு நாட்டு சட்ட திட்டத்தின் பார்வையில் பார்க்கப்பட்டால் அதில் பல சாதக பாதகங்கள் இருக்கிறது.

நம்நாட்டு வங்கிக் கணக்கில் இருந்து வெளிநாட்டில் இருந்து செலவு செய்தால் அத்தகவல் வெளிநாட்டில் உள்ள தொழில்நுட்ப இடைத்தரகரிடம் சென்று விடுவதால் அத்தகவல் திரட்டு அந்நாட்டிலும் சேமிக்கப்படலாம்.

அதேபோல் வெளிநாட்டு நிறுவனங்கள் உதாரணத்திற்கு கூகுள், அமேசானில் பணபரிவர்த்தனை தகவல் அமெரிக்க சர்வர்களிலும் நம் நாட்டு சர்வர்களிலும் இருக்கிறது.

அமேசான் அத்தகவல்களை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அமேசான் வழியாக எடுக்க உதவுகிறது. இது இதர இந்திய நிறுவனங்கள் இத்துறையில் செயல்படும்போது பெரிய பின்னடைவுடன் தானே செயல்பட முடியும்!

எந்த பகுதியில் எது அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது முதல் எந்த விலையில் இருந்தால் வாங்குகிறார்கள் என்பது வரை நமது தகவல் திரட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதித்தால், உள்நாட்டு நிறுவனங்கள் அதை ‘ஏகபோக உரிமை’ அதாவது Monopoly trade practise என்று தானே பார்க்கப்பட வேண்டும்.

இதை இந்தியா விரும்பாததால் இந்தோனேசியா தலைமையில் தகவல் திரட்டு திட்ட வகுப்பு கூட்டங்களை புறக்கணித்து விட்டது. குறிப்பாக பல முக்கிய முடிவுகளை ஜப்பானில் எடுக்க இருந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இது எப்படி எதிர்நோக்க வேண்டும்? 1944–ல் சிகாகோ ஒப்பந்தம் என்ற அதிமுக்கிய முடிவு ஏற்கப்பட்டது. அது விபத்தில்லா விமான பயணத்திற்கு வழிவகுத்தது.

52 உலக நாடுகள் அச்சமயம் விமான பயண ஆபத்துக்கள், அதிகரித்துவரும் சேவைகள் மற்றும் மிகப் பெரிய முதலீடுகள் என்பன பற்றிய கருத்துக்கள் அலசி ஆராய்ந்து எடுத்த பல்வேறு முடிவுகள் இன்று மிகப்பெரிய வசதியாக இருப்பதை மறந்து விடக்கூடாது.

அன்று எடுக்கப்பட்ட முடிவுகளால் பல நாடுகளுக்கு இடர் ஏற்படுத்தியிருந்தாலும் ஒப்பந்தத்தை மீறாது செயல்பட்டதால் 75 ஆண்டுகளில் அதிவேக பயண முறையும் அலுப்பில்லா சொகுசு பயணமும் உறுதியாக கிடைக்கிறது அல்லவா?

அடுத்த மாதம் ஜி-20 தலைமை நமக்கு கிடைத்து விடும். அடுத்த நவம்பர் மாதத்துக்குள் 200 கூட்டங்களை நாம் நடத்திட ஜி20 நாடுகளின் பங்கேற்பு இருக்கும்.

நாம் சர்வதேச கடன்கள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம்

தர இருப்பதாக நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

இதுவரை தலைமை வகித்த இந்தோனேசியா, தற்போது தலைமை ஏற்கும் இந்தியா மற்றும் அடுத்து தலைமை ஏற்க இருக்கும் இத்தாலி ஆகிய மூன்று நாடுகளும் கொண்ட மூன்று நாடு கூட்டணி, இது எதை முன்னுரிமை கொடுத்து விவாதிப்பது போன்ற விவகாரங்களில் ஆலோசித்து முடிவு எடுக்க வைக்கிறார்கள்.

தாம் உணவு பாதுகாப்பு விவகாரத்தில் நிபுணத்துவம் கொண்ட நாடாக இருப்பதால் நாம் ஏற்படுத்த இருக்கும் பல்வேறு திட்டங்களில் ஏழை நாடுகளுக்கு சாதகமாக இருக்கும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கிறது.

நாம் தலைமையேற்று நடத்துவதால் ரஷ்யாவின் பங்கேற்பு இருக்கும் அதை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா ஏற்குமா?

தற்போதைய இறுக்கமான பொருளாதார சூழலில் உலக நாடுகள் பரந்த மனத்துடன் நாடுகளின் எல்லைகளைக் கடந்து நல் எண்ண தூதர்களாக செயல்பட வேண்டும் என்று இந்தியா நம்புகிறது என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

நாம் ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு உணவு, நிதி உதவிகள், மருந்துகள் தந்து உதவி வருவதுபோல் பெரிய பொருளாதார நாடுகளும் பிற சிறு நாடுகளுக்கு உதவுவதை சமூகப் பொறுப்புடன் பார்ப்பது அவசியம். அதில் வர்த்தக வாய்ப்புகளுக்கு இடம் தரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

அதேபோல டிஜிட்டல் புரட்சியின் வேகத்தை உணர்ந்து அதிலும் ஆலோசனைகள் வரவேற்று நல்ல முடிவுகளை ஒப்பந்தமாக அறிவிக்கவும் நாம் தயங்கி இருந்துவிடக்கூடாது.

ஜப்பான் டிஜிட்டல் மாநாட்டில் ஜி20 நடத்திய கலந்தாய்வுகளை மீண்டும் பரிசீலிக்க இந்தியா முயற்சித்து அதில் பிறர் கருத்துகளையும் ஏற்க தயங்கக்கூடாது.

ஜி20 நாடுகள் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்ஸிகோ, துருக்கி, இங்கிலாந்து ஆகிய 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இருக்கிறது.

சர்வதேச அளவில் ஜி-20 நாடுகள் தயார் சக்தி 85 சதவிகிதம் ஆகும். சர்வதேச வர்த்தகத்தில் 75 சதவிகிதமும், உலக ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை கொண்டுள்ளது.

மொத்தத்தில் சர்வதேச நிகழ்வுகளில் ஜி-20 எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானது, வலிமையானதும் ஆகும்.

அத்தகைய அமைப்பின் தலைமை நமக்கு கிடைத்திருக்கிறது, உலக வரலாற்றில் இல்லாத பல பிரச்சினைகளை இன்றைய தலைமுறைக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவது தொடராமல் தீர்வு காணப்படும் கட்டத்தில் நமது பங்கேற்பும் இருப்பது நமக்கு மிகப்பெரிய கலவரம் ஆகும். அதை பொறுப்புடன் செயல்படுத்த தயாராக வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *