செய்திகள்

கர்னாடகாவில் ஓலா, ஊபர், ராபிடோ ஆட்டோக்களுக்கு தடை: முதல்வர் உத்தரவு

பெங்களூர், அக்.8– கர்னாடகாவில் ஓலா, ஊபர், ராபிடோ ஆட்டோக்களுக்கு தடை விதித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கர்னாடகத்தில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் செல்போன் செயலி மூலம் வாடகை கார்களை இயக்கி வருகின்றன. தற்போது இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது. பொதுவாக ஆட்டோக்களில் குறைந்தபட்சமாக 2 கிலோ மீட்டர் பயணிப்பதற்கு ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. மேலும் கூடுதல் தொலைவிற்கு கிலோ மீட்டருக்கு ரூ.15 வீதம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த […]

செய்திகள்

அக்னிபாத் திட்டத்தில் அடுத்தாண்டு முதல் பெண்கள் சேர்ப்பு: விமானப்படைத் தளபதி

சண்டிகர், அக். 8– இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி அறிவித்துள்ளார். இந்திய விமானப்படை தினம், சண்டிகரில் இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றிய விமானப் படைத்தளபதி வி.ஆர். சவுத்திரி, இந்திய விமானப்படை அதிகாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆயுத பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இப்போது தான் இந்த பிரிவு தொடங்கப்படுவதாகவும், மத்திய அரசு இப்போது தான் இதற்கு […]

செய்திகள்

குஜராத் கடற்பகுதியில் ரூ.350 கோடி ஹெராயினுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

ஆமதாபாத், அக்.8– குஜராத் கடற்பகுதியில் இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், குஜராத் கடற்கரை பகுதியில் ரூ.350 கோடி மதிப்பு கொண்ட 50 கிலோ ஹெராயினுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில், பாகிஸ்தானுக்கு சொந்தமான அல் சகார் என்ற படகு சிக்கியது. அதில் சோதனை நடத்தியதில் 50 கிலோ ஹெராயின் இருந்தது தெரிய வந்தது. […]

செய்திகள்

மாநில மொழிகள், பண்பாடுகள் மீது தாக்குதல் ஏன்? ராகுல் காந்தி கேள்வி

பெங்களூரு, அக. 8– கன்னட மொழியும், கர்நாடக கலைப் பண்பாடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது ஏன்? என்று கன்னட ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தற்போது பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் போது ராகுல் காந்தி பல்வேறு மக்களைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், நேற்று ராகுல் காந்தி கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்களுடன் […]

செய்திகள்

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி

புதுடெல்லி, அக்.7– அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே இந்தியாவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்து தினமும் ஒரு வரலாற்று உச்சத்தை எட்டி வருகிறது. இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம் காரணமாக சரிவு […]

செய்திகள்

தி.மு.க. தலைவர் தேர்தல்: ஸ்டாலின் வேட்பு மனு

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார் சென்னை, அக்.7– தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட விருப்பம் தெரிவித்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் 32 விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தி.மு.க.வின் 15வது உட்கட்சி தேர்தலையொட்டி முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான […]

செய்திகள்

சென்னை உட்பட 8 நகரங்களில் 5ஜி சேவை: ஏர்டெல் அறிமுகம்

கூடுதல் கட்டணம் இல்லை; சிம் கார்டை மாற்றத் தேவையில்லை புதுடெல்லி, அக்.7– இந்தியாவில் சென்னை உட்பட 8 முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது. இதற்காக, சிம் கார்டு மாற்றத் தேவையில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் கூறியிருப்பதாவது: 5ஜி சேவையை முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாராணாசி ஆகிய 8 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளோம். 5ஜி இணைப்புக்கான கட்டமைப்புகள் […]

செய்திகள்

36 வது இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகள்: 19 தங்கம், 20 வெள்ளி, 19 வெங்கலம் என தமிழ்நாடு 58 பதங்கம்

தமிழ்நாட்டின் ஆண், பெண்கள் கூடைப்பந்து அணிகளுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் அகமதாபாத், அக். 7– தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டின் ஆண்கள் கூடைப்பந்து அணி தங்கப்பதக்கம் வென்று அசத்திய நிலையில், பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய […]

செய்திகள்

திருப்பதியில் குவிந்த கூட்டம்: 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி, அக். 7– திருப்பதியில் பிரமோற்சவம் முடிந்த நிலையில் புரட்டாசி மாதத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 36 மணி நேரம் காத்திருந்து இலவச தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் கடந்த 27-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனம், விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். […]

செய்திகள்

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை: கமல்ஹாசன்

சென்னை, அக். 6– ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை; அது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று, பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறினார். உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கான முன் பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம், முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்ததாக லைகா […]