செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பின் 31 வழக்கறிஞர்களுக்கு கோர்ட் சம்மன்

சென்னை, பிப். 25– சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் காவல்துறை மோதல் சம்பவம் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை எழும்பூர் நீதிமன்றம் 31 வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் படுகாயம் அடைந்தனர். காவல்துறையினர் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.இந்த மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றப்பட்டது..காவல்துறையினர் […]

செய்திகள்

புல்வாமா தாக்குதல்: ராஜ் தாக்கரே கோரிக்கை

மும்பை, பிப். 25– புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்திருக்கிறார். மகாராஷ்டிர மாநிலம் கோலபூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் தாக்கரே, “பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 40க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் அரசியல் பலிகடாக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்சியும் […]

செய்திகள்

திருவான்மியூர் பள்ளியில் காலை உணவுத் திட்டம் கவர்னர் துவக்கி வைத்தார்

சென்னை,பிப்.25– சென்னை திருவான்மியூர் மேல்நிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை இன்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வைத்தார். அதன்படி 1000 பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கப்படும். சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அக்ஷய பாத்திரா அறக்கட்டளை இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. தற்போது ஆயிரம் குழந்தைகளுடன் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டம் இரண்டு மாதங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் 5,000 குழந்தைகளுக்கும், இந்த கல்வி ஆண்டில் இருபதாயிரம் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அக்ஷய பாத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த அறக்கட்டளையானது கவர்னர் மாளிகைக்கு […]

செய்திகள்

ஜெய்ஷ்–இ–முகமது அமைப்பின் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்,பிப்.25– ஜம்மு காஷ்மீரில் குல்கம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில் போலீஸ் அதிகாரி ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தனர். இது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:– குல்கம் மாவட்டம், தாரிகம் பகுதியில் ஜெய்ஷ்–இ–முகமது தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினருடன் இணைந்து, காஷ்மீர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காஷ்மீர் போலீஸ் டி.எஸ்.பி. அமன் தாக்கூர் […]

செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்: எஸ்.டி. குமார் வழங்கினார்

பெங்களூர், பிப். 25- கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில இணைச்செயலாளர் எஸ்.டி. குமார் வழங்கினார். ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா, அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆணையை ஏற்று கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. சார்பில் பெங்களூர் புலிகேசி நகர், முனீஸ்வரா வார்டு, சகாயபுரம் […]

செய்திகள்

நாகநதியின் குறுக்கே ரூ.3 கோடியில் பாலம் கட்டும் பணி

வேலூர், பிப்.25– நாகநதியின் குறுக்கே ரூ.3 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பணியை துவக்கி வைத்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் துத்திக்காடு ஊராட்சியில் நாகநதி ஆற்றின் குறுக்கே கிராம பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல வசதியாக புதிய பாலம் ஊரக வளர்ச்சி முகமை மூலம் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 88 மீட்டர் நீளம் 12 மீட்டர் அகலம் மற்றும் […]

செய்திகள்

வால்பாறை, முதுமலையில் காட்டு தீ

கூடலூர், பிப். 25 முதுமலை காட்டில் பரவி வரும் கடும் காட்டுத்தீயில் சிக்கி வன உயிரினங்கள் பரிதாபகமாக உயிரிழந்து வருகின்றன. கூடலூர் அருகே முதுமலை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கேரளா கர்நாடகத்தை ஒட்டி உள்ளது. இங்கு காட்டெருமைகள், மான்கள், குரங்குகள், பாம்புகள், மயில்கள், பன்றிகள், கரடிகள், சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன. தற்போது கடும் வெயிலின் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள நீர் […]

செய்திகள்

‘‘பிரதமரின் கிசான் சம்மான்’ நிதி திட்டம் மூலம் தமிழகத்தில் 20 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு பலன்’’

சென்னை, பிப். 25– பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் முதல் தவணைக்கான நிதி வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கி, அவர்களது வாழ்க்கை வளம் பெற வழி வகுக்கும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ், முதல் தவணைக்கான நிதி உதவி ஆணைகளை வழங்குகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இனிய விழாவில் பங்கேற்பதில் நான் மிகுந்த […]

செய்திகள்

அண்ணா.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை

சென்னை,பிப்.25– அண்ணா.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–- 33 -வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குச் சென்று வந்தேன். ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு பெரிய சுமை என்ற நிலைமை மாறி 90 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களை ஒருங்கிணைத்து கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி சிறு குறு தொழில்களை உற்சாகப்படுத்த ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் […]

செய்திகள்

குழந்தைகளைப் பாலியல் இச்சைக்கு உட்படுத்துபவர்கள் சாத்தானின் கருவிகள்

வாடிகன்,பிப்.25– குழந்தைகளைத் தங்களின் பாலியல் இச்சைக்கு உட்படுத்தும் பாதிரியார்கள் சாத்தானின் கருவிகள் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசிய போப் கூறியதாவது:– குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது மனித பலிக்குச் சமமானது. ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகளில் பாதிரியார்களால் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு பாலியல் வன்முறைக்கும் சரியாகப் பாடம் கற்பிக்கப்படும். இது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட தேவாலயங்கள், ஏற்கெனவே பிரச்சினையில் சிக்கியிருந்தால் தீவிர கவனம் கொடுத்து விசாரிக்கப்படும். முன்னொரு காலத்தில் சில கலாச்சாரங்களில் கொடூரமான மத நடைமுறைகள் […]