செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,000 ஆக உயர்வு

சென்னை, ஜன. 17– பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர், 100 நாட்களை கடந்த நிலையில், போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,000-ஐ கடந்துள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பின் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி போரை தொடங்கியது. இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. 24,000 பேர் உயிரிழப்பு இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது. […]

Loading

செய்திகள்

செஸ் தரவரிசையில் இந்தியா முதலிடம்: உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

ஹாக், ஜன.17– நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இந்திய தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். இந்தியாவில் செஸ் போட்டிகள் என்றாலே தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவார். செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அவர் பல ஆண்டுகளாக இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு […]

Loading

செய்திகள்

உலகின் வலிமையான ராணுவம்: அமெரிக்கா வழக்கம்போல் முதலிடம்

ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு 2, 3, 4 வது இடம் வாஷிங்டன், ஜன. 17– சர்வதேச அளவில் எந்த நாட்டின் ராணுவம் பலமாக உள்ளது, எந்த ராணுவம் பலவீனமாக இருக்கிறது என்பது குறித்த பட்டியலை குளோபல் ஃபயர்பவர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் பாதுகாப்புத் தகவல்களைக் கண்காணிக்கும் இணைய தளமான குளோபல் ஃபயர்பவர் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் வலிமையான ராணுவம் கொண்ட நாடு மற்றும் பலவீனமான ராணுவத்தைக் கொண்டுள்ள நாடு குறித்த பட்டியலை […]

Loading

செய்திகள்

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

நடிகர் சுரேஷ்கோபி மகள் திருமணத்திலும் பங்கேற்றார் குருவாயூர், ஜன. 17 கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். கேரளா மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்துள்ளார். கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை 7.35 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார். அங்கு அவரை ஏராளமான பாரதீய […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.320 குறைந்தது

சென்னை, ஜன.17– சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46 ஆயிரத்து 480-க்கு விற்பனையாகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 810-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.46 ஆயிரத்து 480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 60 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.40-க்கும் பார் வெள்ளி ரூ.77 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

செய்திகள்

பிப்ரவரியில் விண்ணில் பாயும் ‘இன்சாட்–3டிஎஸ்’ செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி

காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெற உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் சென்னை, ஜன.17- காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான ‘இன்சாட்–3டிஎஸ்’ செயற்கைகோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி.–எப்14 ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 புத்தாண்டில் கடந்த 1–ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி–58 ராக்கெட்டில் ‘எக்ஸ்போசாட்’ என்ற ‘எக்ஸ்ரே போலரிமீட்டர்’ என்ற செயற்கைகோளை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் […]

Loading

செய்திகள்

தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர்

பிரதமர் மோடி புகழாரம் சென்னை ஜன. 17– எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- இன்று எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவரது வாழ்க்கையை நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு பார்வை […]

Loading

செய்திகள்

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு காலிஸ்தான் தீவிரவாதி கொலை மிரட்டல்

சண்டிகர், ஜன. 17– பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு, காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காலிஸ்தான் தீவிரவாதிகள் வெளிநாடுகளில் இருந்து அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு இந்தியாவுக்கு மிரட்டல் விடுப்பது வழக்கமாகி வருகிறது. இந்த தீவிரவாதிகள் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர். முதலமைச்சருக்கு மிரட்டல் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதியும், தடை செய்யப்பட்ட எஸ்.எப்.ஜே. அமைப்பின் தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் […]

Loading

செய்திகள்

மகுவா மொய்த்ரா டெல்லி இல்லம்: உடனடியாக காலி செய்ய நோட்டீஸ்

டெல்லி, ஜன. 17– மகுவா மொய்த்ரா தனது டெல்லி இல்லத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற குடியிருப்பு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கவுதன் அதானியின் பங்குச் சந்தை முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தார். இதனைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே, மகுவா மொய்த்ரா மீது லஞ்சம் வாங்கிக்கொண்டு கேள்வி எழுப்புவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டு பேரையும் நேரில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

புடலங்காய் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் புடலங்காய்

கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து அதிகமுள்ளது நல்வாழ்வுச் சிந்தனைகள் பிஞ்சுப் புடலங்காய் சமைத்துச் சாப்பிட்டால் அறிவு வளரும்; படிப்பு வரும்; சர்க்கரை நோய் கட்டுப்படும் . மேலும் ஏராளமான பயன்களும் இருக்கின்றன. அவற்றை அறிய தொடர்ந்து படியுங்கள். தமிழகம் முழுவதும் தோட்டங்களில் புடலங்காய் பரவலாக பயிரிடப்படுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் சூட்டை குறைக்கும். நல்ல பசியை உண்டாகும். வயிற்றுப் பொருமலை நீக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும். இதன் காய், வேர், இலை […]

Loading