சிறுகதை

பெயர் மாற்றம் – மு.வெ.சம்பத்

ராமசாமி கடந்த ஜனவரி மாதம் பணியிலிருந்து ஓய்வடைந்தார். அடுத்த இரு மாதங்களில் தனக்கு வரவேண்டிய பணப் பலன்களை முறையானபடி பிரித்து வங்கியில் செலுத்தினார். ராமசாமி அடுத்த என்ன செய்யப் போகிறார் என்று அவரது குடும்பமே ஆவலாய் எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தது.

அன்று வெளியே சென்று வந்த ராமசாமி தொலைக்காட்சியில் தேர்தல் தேதி அறிவித்தவுடன் சிறு பிள்ளை போல் துள்ளிக் குதித்தது கண்டு, அவர் மனைவி போதுங்க இவ்வளவு நாள் உழைத்தது போதும், எதற்கு வெய்யிலில் யாரோ வெற்றி பெற, நாயாய் அலைகிறீர்கள், உழைத்த உங்களை வெற்றி பெற்றவர்கள் ஞாபகம் வைத்திருப்பார்களா, அதை விட ஓட்டு கேட்கும் ராமசாமி என்ற பெயர் மாற்றம் வேறே, சகிக்கலை என்றதும் ராமசாமி இந்த தடவை நான் யார் பின்னாலேயும் செல்ல மாட்டேன் பார் என்றதும் திருந்தாத மனிதர்கள் என்று சொல்லி அவரது மனைவி நகர்ந்தாள்.

சற்று நேரம் கண்ணை மூடி யோசித்த ராமசாமி மறுநாள் கடைக்குச் சென்று. மூங்கில் குச்சிகள், அட்டைகள், கலர் கிரேயான்ஸ் போன்ற இதர பொருட்கள் வாங்கி வந்தவுடன், இவற்றைப் பார்த்த அவர் மனைவி அடுத்த ஆட்டம் ஆரம்பமாச்சா என்றாள். ராமசாமி எதையும் பொருட்படுத்தாமல் வேலையில் மூழ்கிட்டார். பதாதைகள் தயார் செய்வதில் முழுமுனைப்புடன் செயலில் இறங்கி மொத்தம் பத்து பதாதைகள் தயார் படுத்தி தனது நண்பர்களை அழைத்து காண்பித்தார். அதிலுள்ள வாசகங்கள் . வாக்குச் சுதந்திரம் நமது பிறப்புரிமை, ஜனநாயகம் நமது அடிப்படை உரிமை, வாக்களிப்பது நமது தலையாய கடமை, ஜனநாயகத்தின் பாதுகாப்பு மற்றும் சமுகத்தின் மதிப்புகளை அளவிடும் கோல் வாக்களிப்பதே, குடிமக்கள் பிரச்னைகளை சுதந்திரமாகக் கூற , நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வாக்களிக்க வேண்டும், அதிக வாக்குப்பதிவு ஜனநாயக அமைப்பின் நியாயத் தன்மையை பலப்படுத்துகிறது, நூறு சதவீத வாக்களிப்பே நமது லட்சியமாக இருக்க வேண்டும், அதிக வாக்காளர்களின் பங்களிப்பே தேர்தலில் நிற்பவர்களுக்கு உற்சாகம் மற்றும் அவர்களது கடமையை உணர்த்தும், வாக்காளர் அக்கறையின்மை, வாக்காளர் உரிமை மறுப்பு இவைகளை எதிர்த்துப் போராடுவோம் இவைகளாகும்.

அப்போது ஒரு நண்பர் நமது பெயர் வாக்களார் அட்டவணையில் இல்லையென்றாலோ அல்லது ஓட்டை யாராவது போட்டு விட்டாலோ, நாம் எப்படி ஓட்டுப் போடுவது என்றதும் ராமசாமி நமது உரிமையை நிலை நாட்ட சட்டம் உள்ளது. சேலஞ்ச் ஓட்டு பிரிவு 49பி மற்றும் டெண்டர் ஓட்டு முறை மூலம் நாம் நமது உரிமையை நிலை நாட்டலாம் என்று சொன்னதும், அதற்குத் தான் அண்ணன் வேண்டுமென்றார்கள்.

மறு நாள் காலை 7.30 மணிக்கு ராமசாமி மற்றும் அவரது நண்பர்கள் பத்து பேர் பதாதைகளுடன் வீதி வலம் வரத் தொடங்கினார்கள். ராமசாமி நண்பர்கள் பதாகைகளில் உள்ள வாசகங்களை மைக் மூலம் சொல்லிக் கொண்டே சென்றார்கள். இதென்ன இப்படி ஆரம்பித்து விட்டார் ராமசாமி என்ற மக்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி விவரித்து விட்டு, தயவு செய்து மறக்காமல் வாக்களியுங்கள். நூறு சதவீத வாக்கே நமது இலட்சியமாக இருக்கட்டும் என்று கூறினார். நாள் தோறும் எல்லா தெருக்களுக்கும் சென்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்பினார். அதற்குப் பிறகு இவர் பெயர் பதாகை ராமசாமி என்றானது. ராமசாமி மனைவி பெயர் மாறி விட்டதா. மகிழ்ச்சியா என்று கூறி விட்டு நகர்ந்தாள்.

வாக்களிப்பு தினத்தன்று தெரிந்த அனைவரையும் வாக்களிக்க செல்லுமாறு அறிவுறுத்தி, வாக்களிக்கச் செய்தார். இதனால் வாக்குச் சதவீதம் உயர்ந்தது கண்டு மகிழ்ந்தாலும் சில நடவடிக்கைகளை தடுக்க முடியாமல் போனதே என்று வருத்தமடைந்தார்.

தேர்தல் முடிந்ததும் ராமசாமி அப்பாடா என வீட்டில் அமர்ந்த நேரம், அவரது மனைவி இனிமேல் அடுத்தது என்ன செய்யலாம் என்ற உத்தேசம் என்றதும் ராமசாமி ஒன்றும் கூறாமல் சிறு புன்னகையைத் தவழ விட்ட போது, நாட்டிற்கு சேவை செய்யவே பிறந்தீரோ என்றாள்.

அப்போது ஒரு தபால் வர, என்னவென்று அதைப் பிரித்து ராமசாமி பார்க்க, இவர் செய்த தேர்தல் சேவைக்காக விருது வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தேதி மற்றும் இடம் தெரிவிக்கப்படும் விரைவில் என்று படித்ததும் அவர் மனைவியைப் பார்க்க, இனிமேல் கால் தரையில் நிற்காது என்று நக்கலாக சொல்லி நகர்ந்தாள்.

அந்த விருது வழங்கும் நாளன்று மனைவி மற்றும் நண்பர்களுடன் சென்ற ராமசாமி, விருது பெற்றதும் விருது வழங்கியவர் உங்கள் அனுபவத்தில் தேர்தல் முறையில் இன்னும் சிறப்பாக நடத்த கருத்துக்கள் சொல்ல விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி அவரது பெயர், முகவரி மற்றும் கைப்பேசி விவரங்கள் அடங்கிய அட்டையைத் தந்தார். மகிழ்வடைந்த நண்பர்கள் ராமசாமியை பாராட்டி விட்டு இனிமேல் நம் அண்ணன் விருது ராமசாமி என்று கை தட்டிக் கொண்டே கூற, அவரது மனைவி இன்னும் என்னென்ன பெயர் மாற்றம் வரப் போகுதோ என்றாள். யார் அங்கு எதைப் பேசினாலும் ராமசாமிக்கு தனது செய்கைக்கு கிடைத்த விருது பற்றி எண்ணியே மகிழ்வாகி நண்பர்களைப் பார்த்து உங்களுக்கு ஊரில் நல்ல விருந்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றதும் ராமசாமி மனைவி சரி தான் விருந்து நன்றாக அமைந்து விட்டால் விருந்து ராமசாமி என பெயர் மாற்றம் மாறி விடுமா எனச் சொல்ல, ராமசாமி தன்னை மறந்து சிரித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *