செய்திகள்

9 மாதத்தில் 11,704 மில்லியன் யூனிட்: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

சென்னை, ஜன. 16– தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 11,704 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, காற்றாலை மின் உற்பத்தி, தேவையைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். காற்றாலைகள் மூலம்உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு […]

Loading

செய்திகள்

பிரிக்ஸ் தலைமைப் பதவி: ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, ஜன. 16– பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா தலைமை வகிக்க ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட பரிமாற்றங்களைத் தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல பிரச்சினைகளில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர்கள் சாதகமாக மதிப்பிட்டனர். மேலும், இந்தியா-ரஷ்யா சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான […]

Loading

செய்திகள் வாழ்வியல்

குறைந்த செலவில் நகரங்களில் தண்ணீர் விநியோகிக்க மும்பை சென்னை ஐஐடி புதிய கண்டுபிடிப்பு

குறைந்த செலவில் நகரங்களில் தண்ணீர் விநியோகிக்க அறிவியல் அறிவோம் குறைந்த செலவில் நகரங்களில் தண்ணீர் விநியோகிக்க மும்பை , சென்னை ஐஐடி சேர்ந்து புதிய வடிவமைப்பு முறையைக் கண்டுபிடித்துள்ளது. இதன் சேவை சிறப்பாக உள்ளது. புதுமையான விலை குறைவான மும்பை மற்றும் சென்னை ஐஐடி-க்களின் கண்டுபிடிப்பு மகாராஷ்டிர நகரங்களில் தண்ணீர் விநியோக சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. தண்ணீர் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள், தண்ணீர் வீணாதல் மற்றும் வலுவிழந்துவரும் தண்ணீர் உள்கட்டமைப்பு போன்ற பிரச்சினைகளை நியாயமான செலவில் எவ்வாறு […]

Loading

செய்திகள்

ஓசூரில் சாமந்திப்பூ மகசூல் அதிகரிப்பால் விலை சரிவு: விவசாயிகள் வேதனை

ஓசூர், ஜன. 16– ஓசூர் பகுதியில் பனிபொழிவு காரணமாக, மகசூல் அதிகரித்ததால் மலர் சந்தையில் சாமந்திப்பூ விலை குறைந்தது. இதனால், பொங்கல் பண்டிகை விற்பனையை ஏமாற்றம் அளித்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் பசுமைக் குடில் அமைத்தும், திறந்தவெளியிலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் பூக்கள், ஓசூர் மலர் சந்தையில் விற்பனைக்குக் […]

Loading

செய்திகள்

காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,500 காவலர்கள்

சென்னை, ஜன. 16– சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாளை காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் […]

Loading

செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

புதுடெல்லி, ஜன. 16– பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:– ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்தது. இரு நாடுகளிடையே நட்புறவை மேலும் வலுபடுத்துவதில் சாதகமான எதிர்கால திட்டங்கள், முன்னேற்றங்கள், பிரிக்ஸ் மாநாட்டிற்கான தலைமையை ரஷ்யா ஏற்றுள்ளது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். உலகளாவிய பிரச்சினைகளில் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இருந்தது. இவ்வாறு அதில் […]

Loading

செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி என்பது வதந்தி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் சென்னை, ஜன.14-– அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது வதந்தி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்’ என்று […]

Loading

செய்திகள்

சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை

சங்கரன்கோவில், ஜன. 14– பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. நாளை பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக 5,000 கிலோ மல்லிகை பூ வரும் நிலையில், தற்போது 300 கிலோ மட்டுமே […]

Loading

செய்திகள்

பொங்கல் திருநாளையொட்டி 3 ஆயிரம் போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கங்கள்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

தீயணைப்பு, சிறைத்துறையினருக்கும் பதக்கங்கள் சென்னை, ஜன.14– பொங்கல் திருநாளையொட்டி 3 ஆயிரத்து 184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 375 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 12 பேருக்கு தொற்று டெல்லி, ஜன.14– இந்தியாவில் புதிதாக 375 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3075 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 441 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 375 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் […]

Loading