செய்திகள்

தானேயில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்ததில் 7 தொழிலாளர் பலி: மாநகராட்சி தகவல்

மும்பை, ஆக. 11– தானேயில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக தானே மாநகராட்சி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், தானேவில் உள்ள 40 மாடிகளைக் கொண்ட ருன்வால் காம்பிளக்ஸ் கட்டடத்தில், நேற்று மாலை தொழிலாளர்கள் லிப்ட்டை பயன்படுத்தி கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது லிப்ட் திடீரென அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் பலியானார்கள். 7 பேரும் பலி இறந்தவர்கள் மகேந்திர சௌபால் (வயது 32), ரூபேஷ் குமார் தாஸ் […]

Loading

செய்திகள்

ஜி–20 உச்சி மாநாடு வெற்றி எதிரொலி; இந்திய பங்கு வர்த்தகம் உயர்வு

மும்பை, செப்.11– ஜி–20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இந்திய பங்கு வர்த்தகம் இன்று உயர்வடைந்து முதலீட்டாளர்களை அதிகம் ஈர்த்து உள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் உயர்ந்து இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமையில் முடிவடைந்தபோது, சென்செக்ஸ் 66,861.16 புள்ளிகள் மற்றும் நிப்டி 19,910 புள்ளிகள் என்ற அளவில் இருந்தன. ஆனால், இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் 0.3 முதல் 0.4 சதவீதம் வரை உயர்வடைந்து உள்ளது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் அனைத்து […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 70 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, செப். 11– இந்தியாவில் புதிதாக 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 507 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 46 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,97,780 […]

Loading

செய்திகள்

லண்டன் கிளம்பினார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

புதுடெல்லி, செப்.11- டெல்லி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் லண்டன் புறப்பட்டு சென்றார். ஜி–20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்‌ஷதா மூர்த்தியுடன் இந்தியா வந்துள்ளார். நேற்று முன்தினம் மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்ற ரிஷி சுனக், பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாநாட்டின் 2-வது நாளான நேற்று மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதற்கு முன்பாக […]

Loading

செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு

சென்னை, செப். 11– அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் […]

Loading

செய்திகள்

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்கா பயங்கரவாதிகள் 3 பேர் கைது

சிறீநகர், செப். 11– சதிச்செயல்களில் ஈடுபட முயற்சித்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில், சதிச்செயல்களில் ஈடுபட முயற்சித்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர். மேலும் பெண் உள்பட 3 பேரிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் பாரமுல்லா பகுதிகளில் நாச […]

Loading

செய்திகள்

‘பைக் டாக்சி’யில் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது

மாணவியின் சமயோசித செயல்பாட்டுக்கு பாராட்டு சென்னை, செப். 11– சென்னையில் பைக் டாக்சியில் சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் நேற்று இரவு 23 வயது கல்லூரி மாணவி ஒருவர், ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல சூளைமேட்டிலிருந்து ஓலா பைக் டாக்சியை புக் செய்துள்ளார். அந்த மாணவியை அழைத்துச்செல்ல முகப்பேரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பைக்கை ஓட்டி வந்தார். பைக்கில் செல்லும் போதே ரமேஷ் அந்த கல்லூரி […]

Loading

செய்திகள்

பணத்தை எடுக்காமல் சில்லறைகளை மட்டும் திருடிய வியப்பான திருடன்

4 கடைகளில் கைவரிசை திருவனந்தபுரம், செப். 11– கேரள மாநிலம் கொல்லம் சாமகடை சாலையில் ஏராளமான கடைகள் வரிசையாக உள்ள நிலையில், மர்ம நபர் ஒருவர் இரவில் 4 கடைகளில் புகுந்து கைவரிசை காட்டினாலும் சில்லறை காசுகளை மட்டுமே திருடிச்சென்றுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் சாமகடை சாலையில், கடைகள் பூட்டியிருந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கடைகளின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். மறுநாள் கடையை […]

Loading

செய்திகள்

தியாகி இம்மானுவேலுவுக்கு ரூ.3 கோடியில் பரமக்குடியில் மணிமண்டபம்

ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, செப்.11– தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ‘தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் […]

Loading

செய்திகள்

சென்னையில் போலீசார் அதிரடி வேட்டை: 17 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

சென்னை, செப். 11– சென்னையில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஒரு வாரத்தில் 17 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” ( மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், […]

Loading