சென்னை, ஜூன்.4- தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 5 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர். இதில் 5 பேரும் ஆண்கள் ஆவார்கள். சென்னை, செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 2 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 10 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44 ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை […]