செய்திகள் வாழ்வியல்

கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்து பொடுகைப் போக்கும் உலர் திராட்சை

நல்வாழ்வு சிந்தனைகள் முடி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் தினமும் ஊறவைத்த உலர் திராட்சையை தவறாமல் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள இரும்பு மற்றும் வைட்டமின் சி முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கிறது. கூந்தல் பளபளப்பாகவும் வலிமையாகவும் இருக்க அவசிமான ஊட்ட சத்தை அளிக்கிறது. மேலும் முடி அடர்த்தியாகி, பொடுகு மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். எதையும் அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். எனவே அதிகப்படியான அளவு உலர்திராட்சை சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உலர் […]

Loading

செய்திகள்

காவிரியில் இருந்து கர்நாடகம் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட வேண்டும்

காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை புதுடெல்லி, அக்.12- காவிரியில் இருந்து கர்நாடகம், தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் பிரச்சினையாகி உள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 88-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, அக். 12– இந்தியாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 342 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 46 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,99,473 […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அணுவுக்கு அப்பால் மானுடம்

ஆர் முத்துக்குமார் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியில் மிகக் குறுகிய கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்துள்ளது. பியர்ரி அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன்னி எல் ஹூய்லியர் ஆகிய 3 விஞ்ஞானிகள் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர். அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்யவும் […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகர் இருக்கை முற்றுகை

அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் சென்னை, அக். 11– எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘‘எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கும்படி இதுவரை 10 முறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், எங்களது கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்கவில்லை. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் […]

Loading

செய்திகள்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பஸ்கள் இயக்கப்படும்

சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தகவல் சென்னை, அக்.11– கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் உறுப்பினர் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கொரோனா காலத்தில் பல்வேறு பஸ்கள் நிறுத்தப்பட்டது. அந்த பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என சட்டசபையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:–- கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்படவில்லை. போதுமான […]

Loading

செய்திகள்

குழந்தையை கடத்திய பெண் காவல் நிலையத்தில் தற்கொலை: மாஜிஸ்திரேட் விசாரணை

கோவை, அக். 11– குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக, கோவையில் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் முத்து ராஜ். இவர் குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றபோது, ஒன்றரை வயது மகன் ஹரிஷை பெண் ஒருவர் […]

Loading

செய்திகள்

காசா கட்டுப்பாட்டுக்குள் வந்தது: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் கட்டிடங்களை குறிவைத்தே தாக்குதல் டெல் அவிவ், அக்.11– காசா எல்லைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் 5வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம் இஸ்ரேலின் நேவடிம் விமானநிலையத்தில் இறங்கியுள்ளதை […]

Loading

செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலையும் காசா

காசா, அக். 11– இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவிற்கு அருகில் உள்ள கடலோர பகுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் கடந்த 24 மணிநேரத்தில் காசாவிற்கு அருகில் உள்ள அல்-பர்ஹான் பகுதியில் பல இலக்குகளைத் தாக்கியுள்ளது என அதிகாரபூர்வமாக இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கிறது. மேலும், இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் ஹமாஸ் எதிர்த் தாக்குதல் நடத்தி வந்தது. சிரியா மற்றும் லெபனான் பகுதிகளில் இருந்தும் பாலஸ்தீன் இராணுவம் தாக்குதல் நடத்தியது. மக்கள் இடப்பெயர்வு […]

Loading

செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எக்ஸ்ரே எடுப்பது போல்: ராகுல் காந்தி

போபால், அக். 11– உடலில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து சரிசெய்ய எக்ஸ்ரே எடுப்பது போன்றதுதான், சமூக பிரச்சினைகளை சரிசெய்வதற்கான சாதிவாரி கணக்கெடுப்பு என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் […]

Loading