செய்திகள்

புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள்

சென்னை, டிச.8- புயல் மழையினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த தேவைப்படும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. பள்ளி விடுமுறை முடிந்து வருகிற 11-ந்தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும், அந்த நேரத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டிய, மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் […]

Loading

செய்திகள்

5வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை: 6.5% ஆக தொடரும்

சக்திகாந்த தாஸ் அறிவிப்பு மும்பை, டிச. 8– ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி தொடர்ந்து 5வது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் முந்தைய அளவிலேயே தொடரச் செய்துள்ளது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் […]

Loading

செய்திகள்

தண்ணீர் வாளிக்குள் விழுந்து பெண் குழந்தை மரணம்

பவானி, டிச. 8– தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒரு வயது பெண் குழந்தை மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கைத்வா லியா மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் என்கிற அருன்பாகத் (வயது 32). இவரது மனைவி சாந்தினி தேவி. இவர்களுக்கு மனிஷா குமாரி (11) மற்றும் போன்பி குமாரி என்ற ஒன்றை வயது பெண் குழந்தையும் உள்ளது. அருன்பாகத் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த பூம்புகார் தெருவில் வசித்து வருகிறார். இவர் […]

Loading

செய்திகள்

புயல் நிவாரண பணிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் ஸ்டாலின்

அனைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் வழங்க வேண்டுகோள் சென்னை, டிச. 28– புயல் நிவாரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.பி.க்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் […]

Loading

செய்திகள்

மிக்ஜாம் புயல் – கனமழை எதிரொலி: எர்ணாவூரில் மழைநீருடன் பல ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணை கலந்தது

5 கி.மீ. நீளத்துக்கு எண்ணெய் படலம் தொழிற்சாலை மீது நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் உறுதி திருவொற்றியூர், டிச.8- கனமழை காரணமாக எர்ணாவூரில் தேங்கிய மழை நீருடன் பல ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் முகத்துவாரம் மற்றும் கடலில் மீன்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் சடையங்குப்பம் முதல் எண்ணுார் முகத்துவாரம் வரை 5 கி.மீ.க்கு வெள்ள நீர் எண்ணெய் படலத்துடன் தேங்கிய வெள்ளநீர் வடிய துவங்கி […]

Loading

செய்திகள்

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி : ‘ஃபார்முலா 4 கார் பந்தயம்’ கால வரையரையின்றி ஒத்தி வைப்பு

சென்னை, டிச.8– ‘மிக்ஜாம்’ புயல் எதிரொலியாக சென்னையில் நடைபெற இருந்த பார்முலா–4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் பார்முலா – 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இந்த கார் பந்தயம் டிசம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தீவுத்திடலில் இருந்து பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணாசாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக […]

Loading

செய்திகள்

நிலைமை சீரடைய தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்

கமல்ஹாசன் பேட்டி சென்னை, டிச. 8– நிலைமை சீரடைய தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு கனமழை பெய்திருக்கிறது. இது ஒரு சவாலான காலகட்டம். பருவநிலை மாற்றங்களால் […]

Loading

செய்திகள்

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் 2 முறை நில அதிர்வு: தெருவில் திரண்ட பொதுமக்கள்

வாணியம்பாடி, டிச. 8– வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் 2 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் திரண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 2 முறை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.சரியாக காலை 7.35 மணி மற்றும் 7.42 மணி அளவில் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்தனர்.குறிப்பாக வாணியம்பாடி நியூ டவுன், யாப்பா நகர், பொரபசர் நகர், ஜனதாபுரம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் […]

Loading

செய்திகள்

15 நாட்களில் தொற்று கிடுகிடு உயர்வு; இந்தியாவில் புதிதாக 179 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 7 பேருக்கு பாதிப்பு டெல்லி, டிச. 08– இந்தியாவில் புதிதாக 179 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 744 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 121 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading

செய்திகள்

2024 மார்ச் 17 ந்தேதி ரஷ்ய அதிபர் தேர்தல்

மாஸ்கோ, டிச. 08– ரஷ்யாவின் அதிபர் தேர்தல் 2024 மார்ச் 17 ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல்சபை தலைவர் வாலென்டினா மாட்வியென்கோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ரஷ்ய அதிபர் தேர்தல் 2024 மார்ச் 17 ந்தேதி நடைபெறும் என ஒப்புதல் அளிக்‍கப்பட்டுள்ளதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ஒருமனதாகவே அளித்துள்ளனர். புதினுக்கே வாய்ப்பு இந்த தேர்தலில் விளாடிமிர் புதின் மீண்டும் போட்டியிடுவார் என எ​திர்பார்க்‍கப்படுகிறது. ஆனால் இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து […]

Loading