செய்திகள் வாழ்வியல்

கீரை, பச்சை இலை காய்கறிகள், கோஸ், ஆட்டு இறைச்சி சமைத்துச் சாப்பிட்டால் வைட்டமின் கே குறைபாடு வராது


நல்வாழ்வுச் சிந்தனைகள்


வைட்டமின்கள் இரண்டு வகை உண்டு. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, இ, கே ஆகும். தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் வைட்டமின்கள் – பி1, பி6, பி7, பி 12 பிரிவுகள், வைட்டமின் சி ஆகும்.

இந்த வைட்டமின்கள் எல்லாமே உடலுக்கு அத்தியாவசியமானவை. சில வைட்டமின்களை உடலை தேக்கி வைத்துகொள்ளும். சில வைட்டமின்கள் தேவையான அளவுக்கு பயன்படுத்தி எஞ்சியவற்றை வெளியேற்றிவிடும். அதனால் இதை தினமும் எடுத்துகொள்ள வேண்டும். அதே நேரம் வைட்டமின் அதிகமாகவோ குறையவோ கூடாது. அது உடல் பணிகளை பாதித்துவிடச் செய்யும்.

சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது, எலும்பு பலவீனமாக இருப்பது, சருமத்தில் தடிப்புகள், விரைவான இதயத்துடிப்பு இவையெல்லாம் வைட்டமின் கே குறைபாட்டின் அறிகுறிகள்.

உணவுப்பாதையில் ஏதாவது ஒரு இடத்தில் இரத்தப்போக்கு இருப்பது, சருமம் வெளிறிபோவது மற்றும் பலவீனம், மலம் கழிக்கும் போது இருண்ட நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து வருவது ( குழந்தைகளுக்கு வைட்டமின் கே பற்றாக்குறைக்கான அறிகுறிகளில் இதை தான் முதலில் மருத்துவர்கள் தேடுவார்கள்.

வைட்டமின் கே1 அல்லது ஃபைலோகுவினோன் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது. வைட்டமின் கே 2 அல்லது மெனக்வினோன் ஆனது விலங்குகளை அடிப்படையாக கொண்ட உணவுகளில் குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருக்களில் உள்ளது. மேலும் குடலும் இந்த வைட்டமின் உருவாக்குகிறது.

வைட்டமின் கே குறைபாடு இருந்தால் உடலில் போதுமான புரதங்களை உற்பத்தி செய்யமுடியாது.

வைட்டமின் கே குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆனால் இது காயம் ஏதேனும் ஏற்படும் போதுதான் கண்டறிய முடியும். இலேசான காயத்துக்கும் சிராய்ப்பு, நகங்களில் இரத்தப்போக்கு அல்லது இரத்தக்கட்டிகள், பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடி பகுதி அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரத்தபோக்கு, தோல் மூக்கு , ஆண்குறியில் இரத்தபோக்கு போன்றவை எல்லாம் குழந்தைகளுக்கான அறிகுறிகள்)

தினசரி தேவையான அளவில் ஆண்களுக்கு 120 மைக்ரோகிராம், பெண்களுக்கு 90 எம்.ஜி. அளவும் தேவை .

வைட்டமின் கே இருக்கும் உணவுகள் :–

வைட்டமின் கே குறைபாட்டை சமன் செய்யக் கீரை, பச்சை இலை காய்கறிகள், முட்டைகோஸ், பிரக்கோலி ​​

தாவர எண்ணெய்கள், அவுரி நெல்லி மற்றும் அத்திப் பழங்கள், சீஸ், சுண்டல், சோயாபீன்ஸ், பச்சைத் தேயிலை தேநீர் போன்றவை எடுத்துகொள்ளலாம் என வைட்டமின் கே நிறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது.

அசைவம் சாப்பிடுபவர்கள் ஆட்டுஇறைச்சி, ஈரல் எடுத்துகொள்ளலாம்.

கொரோனா தொற்று எதிர்க்க இந்த வைட்டமின்கள் எல்லாம் நிச்சயம் உதவும்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *