செய்திகள் வாழ்வியல்

கார்பன் வெளியேற்றத்தை குறைத்து குறைந்த விலையில் புதியவகை சிமெண்ட் ; சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு


அறிவியல் அறிவோம்


கார்பன் வெளியேற்றத்தையும் உற்பத்தி செலவையும் குறைக்கும் புதிய வகை சிமெண்ட் வகையை உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடியின் பேராசிரியர் மனு சந்தானம் தெரிவித்தார்.

உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் சிமெண்ட் உற்பத்தித் தொழில்களால் மட்டும் கிட்டத்தட்ட 8 விழுக்காடு வெளியேறுகிறது. இதனால் சிமெண்ட் உற்பத்தியால் ஏற்படும் கார்பன் அளவை குறைக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.

அந்த வகையில், சென்னை ஐஐடி கார்பன் வெளியேற்றத்தையும், உற்பத்தி செலவையும் குறைக்கும் சிமெண்ட் வகையை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சிமெண்ட் வகைக்கு எல்சி 3 (Limestone calcinated clay cement (LC3)) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுண்ணாம்பு கால்சினேட்டட் மற்றும் சில களிமண் வகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இயற்கையான சுண்ணாம்பு கற்களையும், களிமண்ணையும் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படுவதால், கார்பன் வெளியேற்ற மற்ற சிமெட்ண்டை விட 40% குறைகிறது. இருப்பினும் வழக்கமான சிமெண்டுடன் ஒப்பிடும்போது தரம் சற்று குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியை சென்னை ஐஐடி, டெல்லி ஐஐடி, டெல்லியின் தாரா வளர்ச்சி நிறுவனம், சுவிட்சர்லாந்த் நாட்டின் இபிஎஃப்எல் நிறுவனம் இணைந்து செய்துள்ளன. தரமான களிமண்ணைப் பொறுத்து உற்பத்திச் செலவும் மற்ற சிமெண்டை விட 25% குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை சிமெண்ட்டை ஏற்கனவே உள்ள சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகளில் தயார் செய்ய முடியும். குறிப்பாக கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் போது இந்த சிமெண்ட் கம்பிகளை துருப்பிடிக்க செய்வது மிக குறைவே. அதனால் கட்டடங்களின் நீட்டித்தன்மை கூடுதலாக 25 ஆண்டுகள் உயரும்.

குறிப்பாக எல்சி 3 சிமெண்ட் உற்பத்திக்கு தேவைப்படும் கையோலினைட் களிமண் வகை சீனவில் எளிதாக கிடைக்கின்றன. ஏனென்றால் அந்த நாட்டில் உள்ள சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் சீன களிமண் குறைவான விலைக்கு கிடைக்கின்றன. இருப்பினும் அங்கிருந்து இறக்குமதி செய்தாலும் இந்த சிமெண்டுக்கான உற்பத்தி செலவு மிக குறைவாகவே இருக்கும். இந்தியாவிலும் இந்த வகை களிமண்கள் இருக்கும் இடங்களும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன என்று பேராசிரியர் மனு சந்தானம் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *