உடலில் முக்கியமானது தோள்பட்டை. இந்தப் பகுதியை தவிர மற்ற எந்த எலும்புகளும் குறிப்பாக கால்மூட்டு, கணுக்கால் உள்ளிட்டவைகள் பல திசைகளிலும் சுழலக்கூடிய பகுதியாக இல்லை. ஆனால் தோள்பட்டையுடன் கூடிய கைகளை நாம் பல்வேறு திசைகளிலும் சுழலச் செய்யலாம். அதனால் எலும்பியல் மருத்துவத்தில் தோள்பட்டை மிக நுட்பமாக பார்க்கப்படுகிறது. இது இரண்டு கைகளை உடலுடன் இணைக்கும் பகுதியாகும். தோள்பட்டை வலி எதனால் ஏற்படுகிறது? தோள்பட்டை பகுதியில் உள்ள தசைகளின் தளர்ச்சி, தசைநார்களின் தொடர்ச்சி அறுபடும்போது அதில் வலி ஏற்படும். […]