செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் 3 நாளுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Spread the love

சென்னை, ஜூலை 16–

குறைந்த காற்றழுந்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்தபோது கூறியதாவது:–

வடதமிழகம் முதல் தென் தமிழகம் வரை வளிமண்டல கிழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுவையின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கூடிய மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. போரூரில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் சராசரியாக 6 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம், புதுவையயில் மழை நீடிக்கும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 31% குறைவாக பெய்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *