நாடும் நடப்பும்

‘பசுமை தமிழகம்’: உறுதி செய்ய வரும் ஸ்டாலினின் புதிய எத்தனால் கொள்கை


ஆர். முத்துக்குமார்


உலகமே கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு மிக தீர்க்கமான முடிவுகள் எடுக்க தயாராகி வருகிறது. பல நாடுகள் பல்வேறு திட்டங்களை அமுலுக்கு கொண்டு வரவும் துவங்கி விட்டது.

கடந்த ஆண்டு இந்தியா பெட்ரோலுடன் 20% எத்தனாலை கலப்பது என்ற முடிவை எடுத்தது, அதன் காரணத்தின் பின்னணியில் வாகன கரும் புகை வெளியேற்றம் குறையும் என்பதாகும்.

வெறும் பெட்ரோல் நல்லது தான், ஆனால் 85% இறக்குமதி செய்யும் நம் நாட்டில் பெட்ரோலை மிக விலை உயர்ந்த பொருளாகவே பார்த்தாக வேண்டும். அதன் காரணமாகவே அதிக எத்தனால் சதவீதத்தை பெட்ரோலில் கலக்க ஆரம்பித்தோம்.

விலை குறைந்த வாகன செலவுகளால் நமது உணவு – சரக்கு போக்குவரத்து முதல் அனைத்து விலைகளும் மிக குறைவாக இருந்தது.

ஆனால் நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்தை பற்றி புரிதல் வெளிப்பட இனியும் தாமதிக்காமல் 2025க்குள் 20% எத்தனால் மட்டுமே கலக்க மத்திய அரசு முடிவு செய்தது.

ஆனால் அதற்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் பற்றிய தெளிவான அறிவுரை ஏதுமில்லாத நிலையில் மாநிலங்கள் அதற்கு வேண்டிய எந்த நடவடிக்கை பற்றியும் அக்கறையின்றி இருக்கின்றனர்.

இதையெல்லாம் சமாளிக்கவே, தமிழகத்தை பசுமைப் பொருளாதாரம் மற்றும் குறைந்த செலவில் மாற்று பசுமை எரிபொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்தும் ‘எத்தனால் கொள்கை 2023’–ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023’, ‘தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023’, ‘தமிழ்நாடு சரக்குப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023’ மற்றும் ‘தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்’ ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழகத்தை பசுமை பொருளாதாரம் மற்றும் குறைந்த செலவில் மாற்று பசுமை எரிபொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்துதல் இக்கொள்கையின் நோக்கமாகும். எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் வாகனங்கள் வெளியேற்றும் புகை உமிழ்வு வெகுவாகக் குறைந்து சுகாதாரம் பேணப்படும்

மேலும, சர்க்கரை ஆலைகளின் செயல்திறனில் மறுமலர்ச்சி ஏற்பட்டு, சர்க்கரை ஆலைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு கொள்முதல் தொகையை தாமதமின்றி வழங்க முடியும். கரும்பு, மக்காச்சோளம் போன்றவற்றைப் பயிரிடும் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

எரிபொருள் இறக்குமதியில் வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பது குறைந்து, இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். இக்கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

சுற்றுச்சூழலுக்கும் உகந்த இயற்கை எரிவாயுவின் உபயோகத்தை ஊக்கப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பை தமிழத்தில் விரைவாக அமைக்கத் தேவையான விதிகள், நடைமுறைகளை உருவாக்கவும் இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகள், வாகனப் பயன்பாடு மற்றும் 2.30 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்க இக்கொள்கை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி முதலீடு கிடைக்கும் எனவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகர எரிவாயு விநியோக உட்கட்டமைப்பை விரைவாக உருவாக்குவதை உறுதி செய்தல், இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்கத் தேவையான விதிகள், ஒழுங்குமுறைகளை உருவாக்குதல், மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் தொலைத் தொடர்பு துறையில் திரவ இயற்கை எரிவாயுவை எரிபொருளாக ஏற்றுக் கொள்ள ஊக்குவித்தல் ஆகியவை இக்கொள்கையின் நோக்கமாகும்.

மாநிலத்தின் வேகனமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. வலுவான போக்குவரத்து உட்கடடமைப்பை உருவாக்குதல், குறைந்த செலவில், உயர்ந்த சேவை கிடைக்கும் நிலையை ஊக்குவித்தல், ஒற்றைச் சாளர அனுமதியை உருவாக்குதல், புதிய தொழில்நுட்ப உத்திகளைச் செயல்படுத்துதல் உள்ளிட்டவை இக்கொள்கையின் அம்சங்களாகும்.

சரக்கு போக்குவரத்து செயல் திட்டம் மூலம் 3 பெருவழி தடங்களில், 50 செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.63,000 கோடி அளவுக்கு செயல் திட்டங்களும், 16 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும்.

தொழில் வளர்ச்சியும் நகரீய விரிவாக்கமும் தமிழகத்தின் பசுமை போர்வையை குறைத்து வரும் நிலையில் அவற்றைச் சமாளிக்க முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் எத்தனால் கொள்கை வரைவு வரும்கால தமிழகத்தின் சுகாதாரமான வாழ்வியல் சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. அதை தமிழகமே வரவேற்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *