செய்திகள்

‘‘மொழி – தொழில்நுட்பச் சவால்கள்” என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

Spread the love

சிதம்பரம், பிப்.15–

அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தில், பல்கலைக்கழக சிறப்பு நிதி நல்கை திட்டத்தின் (ஐந்தாவது நிலை) கீழ் ‘‘மொழி – தொழில்நுட்பச் சவால்கள்” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

மொழியியல் இயங்குநர் இரா. சரண்யா தலைமையுரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் பல்கலைக்கழக சமஸ்கிருத மொழித்துறைத் தலைவர் அம்பா குல்கர்னி மையக் கருத்துரையாற்றினார். அடுத்து தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும், பாரதியார் பல்கலைக்கழக சிறப்பு பேராசிரியருமான கி. கருணாகரன் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் இயக்குநர் செ.வை. சண்முகம் மற்றும் மொழியியல் முன்னாள் இயக்குனர் வி. திருவள்ளுவன் ஆகிய மூவரும் வாழ்த்துரை வழங்கினர்.

துவக்க விழாவில் முனைவர் ப. குமரேசன் வரவேற்புரையும், முனைவர் ஆர். லலிதாராஜா நன்றியுரையும் வழங்கினர். இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் 120-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் மொழி மற்றும் தொழில்நுட்பக் கோட்பாடுகளின் அடிப்படைக் கருத்துக்களையும் மொழியியல் நுணுக்கங்களையும் ஒருங்கிணைக்கும் போது எதிர்கொள்ளும் சாவால்களை மையமாகக் கொண்டு அமையப் பெற்றிருந்தன.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இதன் நிறைவு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் நி.கிருஷ்ணமோகன் நிறைவு விழா உரை ஆற்றினார், மொழியியல் உயராய்வு மைய முன்னாள் இயக்குநர் சீனிவாச வர்மா, பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் மொழியியல்துறைத் தலைவர் சண்முகம் மற்றும், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன துணை இயக்குனர் பெர்னாண்டஸ் ஆகிய மூவரும் வாழ்த்துரை வழங்கினர். இதில் நெடுஞ்செழியன் வரவேற்புரையும் முனைவர் சந்திரமோகன் நன்றியுரையும் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *