செய்திகள் நாடும் நடப்பும்

உருகும் ராட்சத பனிப்பாறை


ஆர் முத்துக்குமார்


பூமியின் வட ,தென் துருவங்கள் பல வழிகளில் பூமி நிலையானதாக இருக்க உதவுகின்றன. அங்குள்ள ராட்சத பனிப்பாறைகள் பூமியின் சமநிலையை உறுதிபடுத்துகிறது. அவை உருகினால் நாம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக கடலோரப் பகுதிகள் முற்றிலும் நீரில் மூழ்கும்!

தற்போது, சிங்கப்பூர், பக்ரைன் போன்ற 29 நாடுகளைக் காட்டிலும் அதிக பரப்பளவு கொண்ட ராட்சத பனிப்பாறை ஒன்று அன்டார்டிகாவை விட்டு வெளியேறி கடலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த பாறை நகர்வது ஏன்? இப்போது எங்கே இருக்கிறது? அது நகர்ந்து செல்வதன் விளைவு என்ன?

A23a என்ற அந்த பனிப்பாறை 1986–ல் அண்டார்டிக்கில் இருந்து பிரிந்தது. அப்போதிருந்து மிகச் சிறிய அளவில் நகர்ந்துகொண்டிருந்த இந்தப் பனிப்பாறை, சமீபத்தில் ஒரு பெரும் இடப்பெயர்வைத் தொடங்கியுள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நிலையான ‘பனித்தீவு’ போல ‘வெட்டெல் கடலின்’ அடிமட்டத்தில் சிக்கியிருந்தது. சுமார் 350 மீட்டர் ஆழமுள்ள அதன் அடிப்பாகம் அதை அந்த இடத்தில் நங்கூரமிட வைத்திருந்தது.

அப்போது அதன் சுற்றளவு சராசரியாக 280 மீட்டர் தடிமன் இருப்பதைக் கண்டறிந்தனர். ஒப்பீட்டளவில் பார்த்தால், இது பிரான்சில் உள்ள ஈஃபில் டவரின் (330மீட்டர்) உயரத்தைவிட இதன் சுற்றளவு அதிகம்.

அந்தப் பனிப்பாறையில் நீரில் மூழ்கியிருக்கும் பகுதியான பரந்த சம தளத்தை, பாறையை அரிப்பதன் மூலம் மேற்புறத்திற்கு அழுத்துகின்றது. இதன் விளைவாக பனிப்பாறையின் அந்தப் பகுதிகள் இடிந்து கடலில் விழுகின்றன.

அந்த அடிப்பகுதி 2020–ம் ஆண்டு வரை சிறிது சிறிதாக உருகியதன் விளைவாக, அந்த பனிப்பாறை மீண்டும் கடல்நீரில் மெல்ல மிதக்கத் தொடங்கியது. பின்னர் காற்றோட்டம், காற்று ஆகியவை அந்தப் பனிப்பாறையை வெப்பமான காற்று மற்றும் நீர் இருக்கும் வடக்கு நோக்கி நகர வைத்தது. இப்போது அண்டார்டிகாவின் மிதக்கும் பனியில் பெருமளவைச் சுமந்து செல்லும் A23a தற்போது அந்தப் பாறையைப் பின்பற்றிப் பயணித்து வருகிறது.

தெற்கு ஓர்க்னி தீவுகள் என்பது அண்டார்டிக் தீபகற்பத்தின் முனையிலிருந்து வடகிழக்கே சுமார் 604 கிமீ மற்றும் தெற்கு ஜார்ஜியா தீவின் தென்மேற்கே 844 கிமீ தெற்குப் பெருங்கடலில் உள்ள தீவுகளின் குழுவாகும்.

அவற்றின் மொத்த பரப்பளவு சுமார் 620 சதுர கி.மீ.

செயற்கைக்கோள் படங்களும் அதை நெருக்கமாகக் கண்காணிக்கும் கப்பல்களில் இருந்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அதிலிருந்து தினமும் பெரியளவிலான பனித்துண்டுகள் கடலில் விழுகின்றன.

இந்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தப் பேரழிவுக்கான பாதையில் A23aஇல் எஞ்சியிருப்பது வேறு எதுவுமே இல்லை என்ற நிலை வரலாம். A23a பனிப்பாறை, அனைத்து பெரிய பாறைகளையும் போலவே அது உருகும்போது அந்தப் பனியில் சிக்கியிருக்கும் கனிம தூசுகளைச் சிதறடிக்கும்.

கடல்பரப்பில் இந்தத் தூசு கடல் உணவுச் சங்கிலிக்கான அடித்தளத்தை உருவாக்கும் உயிரினங்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக உள்ளது. பிளாங்டன் முதல் பெரிய திமிங்கிலங்கள் வரை, அனைத்தும் இந்தப் பெரும் பனிப்பாறையின் அழிவிலிருந்து பயனடையும்.

இந்தப் பெரும் பனிப்பாறை குறித்து மக்கள் கேட்கும்போதெல்லாம் இதற்குக் காரணம் காலநிலை மாற்றமாகத்தான் இருக்க வேண்டும்; இது வெப்பமயமாதலின் விளைவு என்று விக்கம் அளிக்கிறார்கள்.

ஆனால், உண்மை மிகவும் சிக்கலானது.

A23a அண்டார்டிகாவின் ஒரு பகுதியிலிருந்து வந்தது. அங்கு நிலைமை இன்னும் குளிராக உள்ளது. அந்த தோற்றப்புள்ளியான ஃபில்ஷ்னர் பனிப்படலம், பனிப்பாறைகளால் உருவாக்கப்பட்ட மிதக்கும் பனிக்கட்டி ஆகும்.

பனிப்படலத்தின் முன்புறம் வெதுவெதுப்பான நீரால் தாக்கப்பட்டால் அது சமநிலையை இழக்கக்கூடும். ஆனால் இது ஃபில்ஷ்னரில் நடப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

உதாரணமாக தென்னாப்பிரிக்காவில் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிலப்பகுதி நீருக்கு அடியில், தென் துருவத்திற்கு மிக நெருக்கமாக இருந்த போது, அவை கடல்தரையில் இழுத்துச் செல்லப்பட்டபோது பனிக்கட்டிகள் விட்டுச்சென்ற தடயங்களின் மீது இன்று நம்மால் நடக்க முடியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *