அரசு பொது மருத்துவமனை மருத்துவர், ஊழியர்களுக்கு உயர் பாதுகாப்பு முக கவசங்கள்:
தென்கொரிய மெரைன் பயோ நிறுவனம் வழங்கியது
சென்னை, நவ. 29–
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தீவிரமாகப் பணியாற்றி வரும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக, தென் கொரியாவைச் சேர்ந்த மெரைன் பயோ நிறுவனம், அவர்களுக்கு உயர் பாதுகாப்பு முகக் கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
‘ஏர் குயின் மாஸ்க்’ என்ற இந்தச் சிறப்பு முகக் கவசங்களை சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை டீன் மருத்துவர் தீரணிராஜனிடம் மெரைன் பயோ தலைமை செயல் அதிகாரி ஹியோயுன் யங் வழங்கினார்.
“ஏர் குயின் மாஸ்க்” பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படும் நுண்ணிய நூலிழைகள் கொண்ட துணியின் 3 அடுக்குகளால் ஆனது. அதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராகச் சிறப்பானப் பாதுகாப்பை வழங்கும். காற்றில் மிதக்கும், பரவும் மிக நுண்ணிய நீர் திவலைகள் உட்பட அனைத்தையும் தடுக்கும் திறன் கொண்டது.
இந்த முகக் கவசத்தின் எடை மிகக் குறைவு என்பதுடன், இவை பணிச் சூழலுக்கு ஏற்ற வடிவமைப்பு கொண்டவை. ஐரோப்பிய தரச் சான்றிதழ் பெற்றவை ஆகும்.இது பற்றி அறிய
www.marinebio.kr வலைதளத்தைப் பார்க்கலாம்.