செய்திகள்

பெகாசஸ் வழக்கு: ஒருவர் கூட ஏன் வழக்கு தொடரவில்லை? சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி

புதுடெல்லி, ஆக. 5– ‘பெகாசஸ் மென்பொருள் மூலம் போன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்கிறார்களே தவிர வேறு எந்த ஆதாரமும் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாருமே இதுவரை ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை? என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார். ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து, சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை […]

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 42,982 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, ஆக. 5– இந்தியாவில் புதிதாக 42,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 982 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 18 […]

செய்திகள்

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணி

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து புதுடெல்லி,ஆக.5– ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்திய அணி 5–4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது. இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து […]

செய்திகள்

சட்டக்கல்லூரிகளில் சேர 26ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் ரகுபதி

சென்னை, ஆக.5- சட்டக்கல்லூரிகளில் சேர ஆன்லைனில் 26–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியின் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு வரும் 5 ஆண்டு (ஹானர்ஸ்) சட்டப் பட்டப் படிப்புகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளில் 2021–22ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து […]

செய்திகள்

தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு

அமைச்சரவை கூட்டத்தில் முடிவு சென்னை, ஆக.5– அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் சேர 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவு நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (4–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:– * இக்கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை […]

செய்திகள்

ரெயில்களில் ‘வை–பை’ வசதி ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, ஆக.5- செலவு அதிகம் என்பதால் ரெயில்களில் வை–பை வசதி திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு வை–பை வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியது. இந்த திட்டத்தை அறிவித்த அப்போதைய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த 4 அல்லது 4½ ஆண்டுகளில் ரெயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி முதற்கட்டமாக ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த வசதி […]

செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒலிம்பிக் வாளை பரிசாகக் கொடுத்த பவானி தேவி

சென்னை, ஆக. 4– ஒலிம்பிக்கில் வாள்வீச்சுப் போட்டியில் கலந்து கொண்ட பவானி தேவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, ஒலிம்பிக் வாளை அவருக்கு பரிசாக கொடுத்தார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவரும் நிலையில், இந்தியா சார்பில் 100-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இதில், இந்தியா சார்பில் வாள்வீச்சுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார். இரண்டாவது சுற்று வரை முன்னேறிய அவர், பிரான்ஸ் வீராங்கனையிடம் 7-15 என்ற புள்ளிகளில் தோல்வியைத் தழுவினார். […]

செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி: நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

சென்னை, ஆக. 4– இந்திய மருத்துவ ஆய்வு கழகம் வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, 18 வயதிற்கு குறைவான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 18 வயதிற்கு குறைவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை வகுக்கக்கோரி, நேர்வழி இயக்க அறக்கட்டளை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் […]

செய்திகள்

உத்திரமேரூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு

காஞ்சீபுரம், ஆக. 4–- காஞ்சீபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் சோழர் காலத்தை சேர்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுவர் அன்னையர் எனப்படும் சப்த மாதர்கள் சிற்ப தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் தலைமையில் அனுமந்தண்டலம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டபொழுது அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த சிற்பத் தொகுப்பை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து கொற்றவைஆதன் கூறுகையில், “நாங்கள் கண்டெடுத்த இந்த சிற்ப தொகுப்பானது ஒரே பலகை கல்லில் 1 […]

செய்திகள்

சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு

சென்னை, ஆக. 4– வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் தனுஷ் மனு மீது, சென்னை உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. நடிகர் தனுஷ், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காரை வாங்கினார். அந்த காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடைகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ரூ.60.66 லட்சம் நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து, தனுஷ் தாக்கல் […]