செய்திகள்

பொங்கல் பண்டிகை: திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மதுரை, ஜன. 12–

பொங்கல் பண்டிகையையொட்டி திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறு வது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யபட்டு வருகிறது.

தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் வந்திருந்து ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் இந்த சந்தையில் காணப்படும்.

இந்நிலையில் ஆட்டுச் சந்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 7,000 முதல் 10,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது. வருகிற திங்கட்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ஆட்டின் விலை ரூ.10,000 முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.13 ஆயிரம் முதல் ரூ.35 ஆயி ரத்துக்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதன்படி இன்று மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடை பெற்றுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கட்டுக்கடங்காத கூட் டத்தில் ஆடு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் ஆட்டுச் சந்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாகவே ஆடுகளின் விலை சற்று கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும், பொங்கல் பண்டிகை முடிந்த பின் ஆட்டின் விலை கட்டுக்குள் வரும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *