மும்பை, நவ.24– மும்பை நகரில் புதிதாக 30 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். மும்பை நகரில் தட்டம்மை பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. இதன்படி, புதிதாக 30 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 22 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் 156 பேருக்கு புதிதாக தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன […]