செய்திகள்

தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

டெல்லி, ஜன. 11–

டெல்லியில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

2 நாள் ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில் டெல்லியில் அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி சென்றுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும், வெளியாக இருக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திரபாண்டே, அருண் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *