செய்திகள் வாழ்வியல்

பிரபஞ்சத்தில் ஒலிக்கும் சத்தம் ; உலகத்திற்கு நிரூபித்த இந்திய தொலைநோக்கி !

அறிவியல் அறிவோம் பிரபஞ்சத்தின் ரகசியங்களை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் உண்டு. அதற்கான தேடல்களையையும் ஆராய்ச்சிகளையும் இந்தியா உட்பட பல நாடுகள் செய்து வருகின்றன. புதிய கிரகங்கள், புதிய விண்மீன் கூட்டங்களை கண்டுபிடித்து வருகின்றனர். இதற்காக பிரத்யேக தொலைநோக்கி, விண்கலங்கள் கூட இயங்கி வருகின்றன. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்கு பின்னும் வானியல் சார்ந்து புது கோட்பாடுகளும் அறிவியல் கிளைகளும் உருவாகி வருகிறது, அந்த வகையில் கடந்த வியாழன் அன்று இந்திய வானியல் ஆய்வு […]

Loading

செய்திகள்

உடற்பயிற்சி செய்த ஜிம் டிரெய்னர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னை, அக். 9– உடற்பயிற்சி செய்த கொண்டிருந்த ஜிம் டிரெய்னர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவர் ஜிம்மில் டிரெய்னராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கொரட்டூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் தீவிர உடற்பயிற்சி செய்துவந்துள்ளார். அப்போது, திடீரென உடல் சோர்வுடன் காணப்பட்டதால், ஜிம்மில் உள்ள குளியறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் நீண்ட நேரம் வெளியில் […]

Loading

செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே 3வது நாளாக தொடரும் சண்டை: 1200 பேர் பலி

இஸ்ரேலுக்கு விரையும் அமெரிக்க போர்க் கப்பல்கள் டெல்அவிவ், அக்.9– இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான சண்டை இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இதில் இருதரப்பிலும் மொத்தம் 1200 பேர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை காலை 6.35 மணிக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் 22 இடங்களில் ஊடுருவி அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் முக்கிய இடங்களில் குண்டுகளை வீசினார்கள். பல இடங்களில் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் இருந்து நடப்பாண்டில் ரூ.23,000 கோடிக்கு ஐபோன் ஏற்றுமதி

டெல்லி, அக். 9– இந்தியாவிலிருந்து ரூ.23,000 கோடிக்கும் மேலாக ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது மொத்த ஏற்றுமதியில் பாதிக்கும் மேலானது எனவும் இந்திய செல்லுலார் மற்றும் மின்னணுவியல் சங்கம் (ஐசிஈஏ) தெரிவித்துள்ளது. ஐசிஈஏ அமைப்பு தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் ரூ.45,000 கோடி மதிப்பிலான கைப்பேசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சாதனங்களை கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் என அரசு எதிர்பார்க்கிறது. பெரும் வளர்ச்சி இதுகுறித்து தெரிவித்துள்ள ஐசிஈஏ […]

Loading

செய்திகள்

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தோனேசியாவின் இடத்தை பிடித்த இந்தியா

பதக்கப்பட்டியலில் இடம்பெற்ற 41 நாடுகள்; 4 நாடுகள் மட்டுமே பதக்கம் பெறவில்லை ஹாங்சோ, அக். 09– 45 நாடுகள் பங்கேற்ற 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 4 இடங்கள் முன்னேறிய நிலையில் (2018 இல் 8 வது இடம்), 2018 இல் 4 வது இடத்தில் இருந்த இந்தோனேசியா 9 இடங்கள் பின்தங்கி 13 வது இடத்திற்கு பின் தங்கிவிட்டது. சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 45 […]

Loading

செய்திகள்

ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

மும்பை, அக். 9– இந்தி நடிகர் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ள நிலையில் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான் ஆகிய இரு படங்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு படங்களுமே பாக்ஸ் ஆபிசில் ஹிட்டாகியுள்ளது. ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதன் மூலம் ஒரே ஆண்டில் ரூ.1000 கோடி வசூலை அள்ளிய ஹீரோ என்ற பெருமையை ஷாருக்கான் பெற்றுள்ளார். இந்த இரு படங்களின் வெற்றியை […]

Loading

செய்திகள்

பாலஸ்தீன நாட்டை உருவாக்க சர்வதேச சமூகம் முன்வர சீனா வெளியுறவு அமைச்சகம் அழைப்பு

பெய்ஜிங், அக். 9– இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என சீனா கூறியுள்ளது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் போரில், இருதரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:– சுதந்திரமான பாலஸ்தீனம் பொதுமக்களைப் பாதுகாக்கவும், நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்கவும் இரு தரப்பும் சண்டையை நிறுத்தி அமைதிகாக்க வேண்டும். இரு நாடுகளின் தீர்வை […]

Loading

செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி; மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு

மும்பை, அக்.9– இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக நேற்றைய வர்த்தகத்தில், 3 வருடத்தில் இல்லாத சரிவை இஸ்ரேல் பங்குச்சந்தை எதிர்கொண்டது. இந்த நிலையில், திங்கட்கிழமையான இன்று காலை வர்த்தகம் துவங்கிய உடன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரை சரிந்து மிகவும் மோசமான அளவான 65,681.52 புள்ளிகளாக உள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று ஐடி சேவை துறை பங்குகள் அனைத்தும் உயர்வுடன் உள்ளது. காரணம் இந்த […]

Loading

செய்திகள்

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கிய 56 பேர் பத்திரமாக மீட்பு

கேங்டாக், அக். 9– சிக்கிமில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்த 4 பெண்கள் உட்பட 56 பேரை, இந்தோ – திபெத்திய எல்லைப் படையினர் பத்திரமாக மீட்டனர். வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், லாச்சென் பள்ளத்தாக்கில் அண்மையில் மேக வெடிப்பால் பலத்த மழை கொட்டியது. இதனால், தீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுங்தாங் அணை உடைந்து, மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாலங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கின. இதற்கிடையே, சுங்தாங் பகுதியில் இந்தோ — திபெத்திய எல்லை […]

Loading

செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமர் மீண்டும் சர்ச்சை கருத்து

புதுடெல்லி, அக். 9– இந்தியா – கனடா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் சில பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில மாதமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீப காலமாகவே இந்தியா- கனடா உறவு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டி இருந்தார். […]

Loading