செய்திகள்

இந்தியாவில் இருந்து நடப்பாண்டில் ரூ.23,000 கோடிக்கு ஐபோன் ஏற்றுமதி

டெல்லி, அக். 9–

இந்தியாவிலிருந்து ரூ.23,000 கோடிக்கும் மேலாக ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது மொத்த ஏற்றுமதியில் பாதிக்கும் மேலானது எனவும் இந்திய செல்லுலார் மற்றும் மின்னணுவியல் சங்கம் (ஐசிஈஏ) தெரிவித்துள்ளது.

ஐசிஈஏ அமைப்பு தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் ரூ.45,000 கோடி மதிப்பிலான கைப்பேசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சாதனங்களை கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் என அரசு எதிர்பார்க்கிறது.

பெரும் வளர்ச்சி

இதுகுறித்து தெரிவித்துள்ள ஐசிஈஏ அமைப்பு, ‘நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதத்தில், இந்தியாவில் இருந்து சுமார் ரூ. 24,850 கோடி மதிப்பிலான கைப்பேசிகள் ஏற்றமதி செய்யப்பட்டிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தைப் பொருத்தவரை ரூ.23,000 கோடிக்கும் மேலாக கைப்பேசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவன கைப்பேசிகளின் மொத்த ஏற்றுமதியில் இந்த எண்ணிக்கை பாதிக்கும் மேலானது என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐசிஈஏ தலைவர் கூறுகையில், ‘இந்தியாவில் இருந்து கைப்பேசி ஏற்றுமதி செய்யப்படுவது 80 சதவீதத்துக்கும் மேலாக வளர்ச்சியடைந்துள்ளது. இது மந்தமான உலக வர்த்தகத்தின் போக்கை தொடர்ந்து மாற்றி வருகிறது. உலகளாவிய மதிப்பு சங்கிலிக்கு விருப்ப இடமாக மாற இந்தியா தொடர்ந்து கடினமாக முயற்சி செய்து வருகிறது. முயற்சிகள் தொடர்ந்து வந்தாலும் போக்கு நேர்மறையாக உள்ளது’ என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *