செய்திகள்

திருவல்லிக்கேணியில் மாடு முட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு

சென்னை, அக். 28– திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஆவடியை அடுத்த பட்டாபிரான் சோராஞ்சேரி பகுதியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை பசுமாடு முட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் ஓடி […]

Loading

செய்திகள்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனை

சென்னை, அக்.28-– மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனையை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து டிவி-டி1 என்ற சோதனை ராக்கெட் மூலம் விண்கலம் கடந்த 21-ந்தேதி விண்ணில் ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக சோதனை நடத்தியது. இதனை தொடர்ந்து, இன்னும் சில மாதங்களில் […]

Loading

செய்திகள்

பாலியல் வன்கொடுமை: இந்தியருக்கு 16 ஆண்டு சிறை தண்டனை; 12 சவுக்கடி

சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு சிங்கப்பூர், அக். 28– கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம், 26 வயதுள்ள இந்தியர், சின்னய்யா என்பவருக்கு 16 ஆண்டுகள் சிறையும் 12 சவுக்கடிகளும் தீர்ப்பாக வழங்கியுள்ளது. சிங்கப்பூரில் 2019 ஆம் ஆண்டு மே 4-ம் தேதி தூய்மை பணியாளராகப் பணியாற்றிய இந்தியரான சின்னய்யா என்பவர், பின்னிரவு நேரத்தில் கல்லூரி மாணவி ஒருவரைப் பின்தொடர்ந்து சென்று, தாக்கி அவரை மறைவான காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 4 ஆண்டுகளாக […]

Loading

செய்திகள்

நாளுக்கு நாள் உயரும் தங்கம்: இன்று சவரனுக்கு ரூ.520 உயர்வு

சென்னை, அக். 28– சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, சவரன் ரூ.46,120 க்கு விற்பனை ஆவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்மையில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ள நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்வு அதன்படி, சென்னையில் நேற்று ஆபரண […]

Loading

செய்திகள்

டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் 2 வது நாளாக தாக்குதல்

டெல் அவிவ், அக். 28– இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களின் உதவியுடன் காசாவுக்குள் முன்னேறி 2-வது நாளாக ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. பாலஸ்தீனத்துக்கு சொந்தமான காசா பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்த இஸ்ரேல், கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் பைடன், ரிஷி சுனக் : போர் பதட்டத்தில் வளைகுடா

திணறும் உலக பொருளாதாரம் ஆர்.முத்துக்குமார் 18 நாட்களை தாண்டிவிட்ட ஹமாஸ் – இஸ்ரேல் போரின் பின்விளைவு உலக பொருளாதாரத்தை பாதிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உக்ரைனில் பிப்.2022ல் துவங்கிய போர் பதட்டம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வர்த்தக சிக்கல்கள் ஆசிய பகுதிகளில் பெரிய தாக்குதலை ஏற்படுத்தவிலலை. ஆனால் இரண்டாம் ஆண்டில் நுழைய இருக்கும் அப்போரின் பின்விளைவுகளை உலக பொருளாதாரங்கள் சந்திக்க திணறிக்கொண்டே மாற்று சிந்தனைகளுடன் செயல்பட துவங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு இருக்க ஹமாஸ் நிலவரம் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 50.50 அடியாக உயர்வு

மேட்டூர், அக். 27– மேட்டூர் அணைக்கான நீர் வரத்து உயர்ந்த நிலையில், நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 50.50 அடியாக உயர்ந்துள்ளது. அண்மையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, காவிரியில் நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,496 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,855 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. நீர் மட்டம் உயர்வு மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி […]

Loading

செய்திகள்

பாஜக ஆளும் மாநிலங்களில் மின்சாரம், குடிநீர் கூட கிடையாது

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு ஐதராபாத், அக். 27– சொந்த மாநிலங்களுக்கு குடிநீர் மற்றும் மின் வசதி ஏற்படுத்தி தர முடியாத பாஜக முதலமைச்சர்கள் தெலங்கானா மாநிலத்திற்கு வந்து பாடம் நடத்தி கொண்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சாடி உள்ளார். தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கி உள்ள அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அச்செம்பேட் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியபோது கூறியதாவது:– சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவதால் தங்களுக்கு எந்த […]

Loading

செய்திகள்

தேர்தல் ஆணைய விளம்பர தூதராக இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமனம்

தேர்தல் கமிஷனர் முன்னிலையில் ஒப்பந்தம் டெல்லி, அக். 27– தேர்தல் ஆணைய விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை தேர்தல் விழிப்புணர்வின் அடையாள சின்னமாக (விளம்பர தூதர்) இந்திய தேர்தல் கமிஷன் அவ்வப்போது நியமிக்கிறது. இந்த நியமனங்கள் தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் நடைபெறும். தேசிய அளவில் விழிப்புணர்வு அடையாள சின்னங்களாக கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, […]

Loading

செய்திகள்

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார்

பீஜிங், அக். 27– சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானாதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவில் 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றியவர் லீ கெகியாங் (வயது 68). முற்போக்கு சீர்திருத்த எண்ணம் கொண்ட இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராவார். ஷாங்காய் நகரில் வசித்து வந்த இவர், திடீரென மாரடைப்பால் காலமானதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன. நள்ளிரவில் உயிரிழப்பு அண்மை […]

Loading