செய்திகள்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனை

சென்னை, அக்.28-–

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனையை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து டிவி-டி1 என்ற சோதனை ராக்கெட் மூலம் விண்கலம் கடந்த 21-ந்தேதி விண்ணில் ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக சோதனை நடத்தியது.

இதனை தொடர்ந்து, இன்னும் சில மாதங்களில் அதிக சோதனை பணிகளை இஸ்ரோ வரிசைப்படுத்தி உள்ளது. குறிப்பாக, இஸ்ரோ இன்டர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட்டால் (ஐ.ஐ.எஸ்.யு) வடிவமைத்து உருவாக்கப்பட்ட ‘வியோமித்ரா’ என்ற ‘பெண்’ ரோபோ எல்.வி.எம்-–3 ராக்கெட் மூலம் விண்வெளியில் உள்ள சுற்றுப்பாதைக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட இருக்கிறது.

இதில் குறிப்பாக, இஸ்ரோ கட்டுப்பாட்டு அமைப்புகள், வெப்ப பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பாராசூட் அமைப்புகள் சோதனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ஏர்-டிராப் டெஸ்ட் (ஐஏடிடி) மற்றும் பேட் அபார்ட் டெஸ்ட் என்ற 2 அறிவியல் சோதனைகள் செய்யப்பட உள்ளது. அடுத்து வரும் 4 சோதனைகளில் டி.வி-டி–2 ராக்கெட் சோதனை 2-வதாக இருக்கும். ஏற்கனவே அனுப்பிய டிவி-டி–1 ராக்கெட் போல் இல்லாமல், டிவி-டி–2 ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்த உடன், விண்கலத்தின் அணுகுமுறையை அறிந்து கொள்வதற்கு மீண்டும் நிலைப்படுத்து வதற்கான ஒரு கட்டுப்பாட்டு அமைப்பை யும் கொண்டிருக்கும்.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது. இது எதிர்காலத்தில் சாத்தியமாகும். அத்துடன், டிவி-டி–1 ராக்கெட்டில் இருந்து கடலில் உப்பு நீரில் விழுந்த விண்கலத்தை மீண்டும் பயன்படுத்த முடியுமா? இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இதை மீண்டும் பயன்படுத்து வதற்கான திட்டத்தையும் வகுத்து வருகிறோம். இதற்காக விண்கலத்தை திறந்து சுத்தம் செய்து என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. ககன்யான் திட்டத்தின் கீழ் பொருத்தமான சோதனைத் திட்டத்திற்கு அதை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படும் ‘2040-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவது உட்பட, இந்தியாவிற்கான லட்சிய விண்வெளிப் பயண இலக்குகளில் முதன்மை யானது ககன்யான் ஆகும்’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *