செய்திகள்

சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து- போலீஸ்காரர் பலி

காவேரிப்பாக்கம், நவ. 21– சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த போலீஸ்காரர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள வீராணம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் இளங்கோ (வயது 29). காஞ்சிபுரத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு வீராணம் புதூருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். கல்பலாம்பட்டு ஏரி அருகே வாலாஜா – -பனப்பாக்கம் சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் […]

Loading

செய்திகள்

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நாளை வெளியிடப்படும்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, நவ. 21– செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நாளை வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.அவர் அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தூக்கம் இல்லாத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருந்தார். மனரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டதால் உடல் எடையும் குறைந்தது.இதனால் கடந்த 15-ந்தேதி ஸ்டான்லி அரசு […]

Loading

செய்திகள் வாழ்வியல்

சளி , ஆஸ்துமா, எலும்புருக்கி நோய்களைக் குணப்படுத்தும் புதிய மருந்து

சென்னை ஐஐடி வேதியியல் பேராசிரியை பூங்குழலி கண்டுபிடிப்பு அறிவியல் அறிவோம் சளி , ஆஸ்துமா, எலும்புருக்கி நோய்களைக் குணப்படுத்தும் புதிய மருந்தை சென்னை ஐஐடி வேதியியல் பேராசிரியை டாக்டர் பூங்குழலி கண்டுபிடித்துள்ளார். சென்னை ஐஐடியில் வேதியியல் பிரிவு பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் டாக்டர் பூங்குழலி. இவர் மத்திய அரசு நிதி உதவியுடன் சமீபகாலமாக வேதிப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தற்போது, அவர் பென்சோ பி தயோஃபேன் என்ற புதிய வேதிப்பொருளை கண்டுபிடித்து உள்ளார். இந்த வேதிபொருள் சளி எலும்புருக்கி […]

Loading

செய்திகள்

பிழைக்கத் தெரிந்த வழி – மு.வெ.சம்பத்

சரவணன் வினிதா தம்பதிக்கு இரு மகள்கள். இருவரையும் பௌதிகத் துறையில் முனைவர் பட்டம் பெற படிக்க வைத்தார்கள். இருவரும் அரசுக் கல்லூரியில் பெரிய பதவி வகிக்கின்றார்கள். மூத்த மகளுக்குத் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன. அடுத்த மகளுக்கு திருமணம் நடந்து தலைத் தீபாவளி வைபவம் எதிர் நோக்கிய நிலையில் சரவணன் ஏற்பாடுகள் செய்ய முனைந்தார். முதலில் இரு சம்பந்திகளையும் அழைப்பதென முடிவு செய்து அவரவர் இல்லம் சென்று முறையாக அழைப்பு விடுத்தார். நல்ல முறையில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்க தினசரி செய்ய வேண்டியது என்ன?

நல்வாழ்வுச் சிந்தனை பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் நச்சுகள் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மிகவும் முக்கியம். நன்கு செயல்படும் நோய்எதிர்ப்பு ஆற்றல் அமைப்பு நோய் தொற்றுக்களை உங்கள் உடலுக்குள் செல்ல அனுமதிக்காது. சளி முதல் காய்ச்சல் வரை கோவிட்-19 வரை, உங்கள் உடலை பாதுகாக்க நோய்எதிர்ப்பு சக்தி அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதே உங்கள் முதல் பாதுகாப்பு. பொதுவான நல்ல ஆரோக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது உங்கள் நோய்எதிர்ப்பு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம்?

ஆர்.முத்துக்குமார் தீபாவளி கொண்டாட்டம் நிறைவு பெற்றது. ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவும் இறுதிப்போட்டியும் நடந்து முடிந்த பரபரப்புடன் நாடே ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பரபரப்பில் ஈடுபட தயாராகி விட்டனர். இம்மாதம் அதாவது நவம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோராம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் பணிகள் மும்முரமாகவே நடந்து கொண்டிருக்கிறது. தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இம்மாநிலங்களில் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்து […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிராவில் இன்று 3.5 ரிக்டரில் நிலநடுக்கம்

தேசிய நில அதிர்வு மையம் தகவல் மும்பை, நவ. 20– மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று காலை 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இந்தியா, மியான்மர், நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. 3.5 ரிக்டரில் நிலநடுக்கம் இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹிங்கோலி நகரில், 5 […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 5 வாரங்களில் 27 மடங்கு உயர்வு

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி சென்னை, நவ. 20– உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த 5 வாரங்களிலேயே, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 27 மடங்கு அதிகரித்துள்ளது. ‘இறக்கும் முன்னதாக உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அவரது அறிவிப்பு வெளியாகும் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 62.24 அடியாக உயர்வு

டெல்லி, நவ. 20– மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 4,015 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர்மட்டம் இன்று காலை 62.24 அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,193 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,015 கனஅடியாக அதிகரித்துள்ளது. 62.24 அடியாக உயர்வு அதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 62.24 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் […]

Loading

செய்திகள்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்

டெல்லி, நவ. 20– இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற உள்ள ‘2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் இன்று காலை இந்தியா வந்தடைந்தார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:– “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது. […]

Loading