செய்திகள்

பிழைக்கத் தெரிந்த வழி – மு.வெ.சம்பத்

சரவணன் வினிதா தம்பதிக்கு இரு மகள்கள். இருவரையும் பௌதிகத் துறையில் முனைவர் பட்டம் பெற படிக்க வைத்தார்கள். இருவரும் அரசுக் கல்லூரியில் பெரிய பதவி வகிக்கின்றார்கள். மூத்த மகளுக்குத் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன. அடுத்த மகளுக்கு திருமணம் நடந்து தலைத் தீபாவளி வைபவம் எதிர் நோக்கிய நிலையில் சரவணன் ஏற்பாடுகள் செய்ய முனைந்தார்.

முதலில் இரு சம்பந்திகளையும் அழைப்பதென முடிவு செய்து அவரவர் இல்லம் சென்று முறையாக அழைப்பு விடுத்தார். நல்ல முறையில் அவர்கள் வரவேற்று வருகிறோம் என்றார்கள். அவர்களும் வருவதாக சம்மதம் தெரிவித்தார்கள். சரவணின் இரு மகள்களான சாதனா மற்றும் சுபத்ரா இருவரும் கைப்பேசியில் தொடர்பு கொண்டு எப்படித் தான் அப்பா சமாளிக்கப் போகிறாரோ என்று கவலைப் பட்டார்கள். ஏதாவது செய்ய வேண்டுமென இருவரும் மனதிற்குள் திட்டம் தீட்டினார்கள். அப்பாவிற்கு தெரிய வந்தால் திட்டுவார்கள் என்ற பயம் தான் அவர்களுக்கு மேலோங்கி நின்றது.

அன்று அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த சாதனா கணவர் உங்கள் அப்பா எனக்கு தலை தீபாவளிக்கு நிறைய செய்தார். முடிந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அதற்குள் சுபத்ரா கணவர் சத்யா தலைத் தீபாவளி வந்து விட்டது. என்ன செய்வாரோ பாவம் என்றும் உங்கள் அப்பா நாம் ஏதாவது செய்வோம் என்றால் அனுமதிப்பாரா என்ற அச்சம் வேறு என்றதும். சாதனா கவலைப் படாதீர்கள் அப்பா பார்த்துக் கொள்ளுவார் என்றார்.

நாள் நெருங்க நெருங்க சாதனாவிற்கு ஒரு வித பதட்டம் ஏற்பட்டது. எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற பயம் தான். அன்று எனது கணவர் கேட்கும் போதே நாம் எதையாவது செய்யலாம் என்று சொல்லி இருக்கலாமோ என்ற எண்ணம் வந்தது சாதனாவிற்கு. இனிமேல் கேட்டால் அது எந்த அளவிற்கு எடுபடும் என்ற ஐயம் ஏற்பட்டது சாதனாவிற்கு சரி நடப்பது நடக்கட்டுமென விட்டு விட்டார்.

சுபத்ரா தொடர்பில் வந்து நான் இரண்டு நாள் முன்னதாக செல்லலாமென்று உள்ளேன் என்றதும் சாதனா நான் முதல் நாள் எங்கள் மாமியார் மற்றும் மாமனாருடன் வருகிறேன் என்றார்.

என் கணவருக்கு ஏதோ ஒரு முக்கியமான வேலையாம். தீபாவளி முதல் நாள் இரவில் வருவதாகக் கூறி விட்டார் என்று சொன்னார் சாதனா. சுபத்ரா என் கணவர் இது வரை ஒன்றும் சொல்லவில்லை என்றார். அவர் அநேகமாக அவரது பெற்றோருடன் வருவார் என நினைக்கிறேன் என்று சொன்னார்.

தீபாவளி முதல் நாள் முதலே சரவணண் வீடு வருகையால் கலை கட்டியது. சரவணன் உறவினர் குடும்பத்தினர், சரவணண் சம்பந்திகள் குடும்பத்தினர்கள் என நிறைய பேர் வந்திருந்தார்கள். அவரவர்களுக்கு தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் ஏதும் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லாமல் போனது.

தீபாவளி அன்று விடியற்காலையில் அவரவர் எண்ணெய் குளியல் செய்து விட்டு வந்தவுடன் சரவணனிண் பெரிய சம்பந்தி எல்லோருக்கும் புதுத் துணிகளைத் தந்து ஆசீர்வதித்தார். எல்லோரும் புத்தாடை அணிந்து புது வித ஜொலிப்புடன் வர, அப்போது பெரிய சம்பந்தி எனக்கும் எனது மைவைிக்கும் புத்தாடைகள் , எனக்கு மோதிரம் மற்றும் செயினும் எனது மனைவிக்கும் மோதிரம் மற்றும் நெக்லெஸூம் எனது மருமகள் வாங்கித் தந்தார் என பெருமையாகக் கூறினார். அப்போது வந்த அடுத்த சம்பந்தி எங்களுக்கும் எங்கள் மருமகள் புத்தாடைகள், எனக்கு பெண்டென்டும், மோதிரமும் எனது மனைவிக்கு மோதிரம் மற்றும் செயினும் வாங்கித் தந்தார் என புன் சிரிப்புடன் கூறினார். அப்போது சரவணன் தன் பங்குக்கு தனக்கு இரண்டு மருமகன்களும் சேர்ந்து வாங்கித் தந்தவைகளை அடுக்கினார். பெரிய சம்பந்தி வீட்டு ஆள் தான் சமையல் எனக் கூறினார் சரவணண். அப்போது அங்கு வந்த சரவணண் மாப்பிள்ளைகள் மற்றும் மகள்கள் புத்தாடை மற்றும் அணிகலன்கள் சரவணண் மிகவும் பிரியப்பட்டு தான் வாங்கியதாகக் கூற, அங்கு வந்திருந்த உறவினர்கள் இந்த வீட்டு மக்கள் பிழைக்கத் தெரிந்த வழிகள் தெரிந்தவர்கள் என்றார்கள். ஒற்றுமை வளர இது மாறி சம்பவங்கள் உதவும் என்றார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *