செய்திகள்

காசா மக்களை உள்ளே விடாமல் கத்தார், ஜோர்டான், எகிப்து நாடுகள் எல்லைகளை மூடியது ஏன்?

குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே கேள்வி வாஷிங்டன், அக்.16– காசாவிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் துடிக்கும் சூழலில் அரபு நாடுகளான கத்தார், ஜோர்டான், லெபனான், எகிப்து ஏன் எல்லைகளை மூடிவைத்திருக்கின்றன என்று அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் நிக்கி ஹாலே கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தரை, கடல், வான் வழியாக நுழைந்து திடீர் […]

Loading

செய்திகள்

இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸுக்கு போப் பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை

டெல் அவீவ், அக். 16– காசாவில் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளான இஸ்ரேலிய குடிமக்களை விடுவிக்குமாறு போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற நேற்றைய பிரார்த்தனையின் போது, ‘இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்பதை நான் அறிந்து வருகிறேன். நான் பலரைப் பற்றி கவலைப்படுகிறேன். குறிப்பாக சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் மீது அதிக கவலை கொள்கிறேன் என்றும் கூறினார். ரத்தம் சிந்த வேண்டாம் கடந்த […]

Loading

செய்திகள்

இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல்: இரண்டு நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு

நியூயார்க், அக். 16– அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனும் பேசினார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 33 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, அக். 16– இந்தியாவில் புதிதாக 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 336 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 45 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,99,621 […]

Loading

செய்திகள்

21-ந் தேதி ககன்யான் சோதனை ஓட்டம்: இலக்கை நோக்கி பயணிக்கும் ‘ஆதித்யா எல்–1′

சென்னை, அக்.16-– ‘ஆதித்யா எல்1′ விண்கலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக பயணிக்கிறது என்றும், ஜனவரி மாதத்தில் இலக்கை சென்றடையும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். பிரபல இயற்கை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சமீபத்தில் மரணம் அடைந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று வந்தார். அங்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் சவுமியா சுவாமிநாதனை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் படத்துக்கு மரியாதை செய்தார். இதையடுத்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.10 அடியாக உயர்வு

மேட்டூர், அக். 15– கடந்த ஒருவாரமாக காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.10 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஒருவாரத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகும் பகுதியில் மழை பொழிவு உள்ளிட்ட காரணங்களாலும், கர்நாடன அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 6 நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9.80 அடி உயர்ந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு […]

Loading

செய்திகள்

பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்த இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்

சோனியா காந்தி பேச்சு சென்னை, அக்.15- சென்னையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்த இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, தி.மு.க. மகளிர் அணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. மாநாட்டுக்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை திறப்பு

வாஷிங்டன், அக். 15– இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள், அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 1891-ஆம் ஆண்டு பிறந்த பி.ஆா். அம்பேத்கா், இந்திய அரசியல் நிா்ணய சபையில் அரசமைப்பு வரைவுக் குழுத் தலைவராக இருந்து, அரசமைப்பை வடிவமைப்பத்தில் முக்கிய பங்காற்றினார். […]

Loading

செய்திகள்

5 மாநில தேர்தல்: காங்கிரஸ் 3 மாநிலங்களுக்கு முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

டெல்லி, அக். 15– அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோதலையொட்டி, தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த மாதம் 7 முதல் 30-ஆம் தேதி வரையிலான வெவ்வேறு நாள்களில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் […]

Loading

செய்திகள்

தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவில் நாடு முழுவதும் சுயமரியாதை பரவிட செய்வோம்

மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை, அக்.15-– சமூக நீதி, சுயமரியாதையை நாடு முழுவதும் பரவிட செய்வோம் என்று தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பேசினார். திராவிடர் கழகம் சார்பில் அந்த இயக்கத்தின் முன்னோடியாக விளங்கிய தளபதி அர்ச்சுனன் மன்றாடியாரின் நூற்றாண்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி, தளபதி மன்றாடியார் உருவப் படத்தை திறந்து வைத்தார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக […]

Loading